அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஐயகோ என்ன கொடுமை சார் இது... Apple iPhone5ல் விளையாட இருந்த என்னை ஏமாற்றிவிட்டார்களே சாந்தா... ஏமாற்றிவிட்டார்கள். iPhone5 வரும் என்று கணவருக்கு வைத்த ஐஸ் எல்லாம் வீண்.
Apple நிறுவனம் iPhone5 வெளியிடாமல் iPhone 4S வெளியிட்டுள்ளது. இன்று நட்ந்த விழாவில் iPhone5 வெளியிடப்படவில்லை என்ற செய்தி தெரிந்தவுடனேயே Apple நிறுவன shares 3.6% வீழ்ச்சியடைந்து விட்டது.
ஆனால் 4Sல் நிறைய புது விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது வரை நீங்கள் அலைபேசியில் பேசியிருப்பீர்கள், ஆனால் இனி அலைபேசியுடனே பேசலாம் என்கிறார்கள். Voice Recognition, 8mp camera, dual core pentium processor எல்லாம் உண்டு. பாட்டரி அதிக நேரம் நீடிக்கும் அதனால் no.1 விளையாட்டு சாதணமாகவும் இருக்கும் என்கிறார்கள்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நம்மூர் மாரியாத்தாவிற்கு நேர்த்தி வைத்து அலகு குத்தி கரகம் எடுப்பார்களே, அது போல் தாய்லாந்தில் புகெத்தில் நேற்று நடந்த திருவிழாவைப் பாருங்கள். 200 ஆண்டுகளுக்கும் மேலான பழைய பாரம்பரியமாம். எதுவுமே கிராபிக்சு இல்லை. மாரியம்மா மீது ஆணை...
இன்னும் சில படங்கள் இருந்தது. ஆனால் எனக்கே பயமாயிருந்தது...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஒரு பாட்டில் பீர் கிடைகாதா என்று அலையும் “குடி” மகன்கள் கேட்டால் புலம்பப் போகிறார்கள். ஜர்மனியில் முனிக் நகரத்தில் பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து நெரிசலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. சாக்கடைக் கால்வாயில் பீர் ஆறு ஓடியிருக்கிறது. விழுந்த பாட்டில்களில் ஒன்றிரண்டை எடுக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி காவலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
18 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
iphone 4sக்கு உங்க கணவரிடம் ஐஸ் வச்சிடுங்கோ... வாழ்த்துக்கள் :-)
கத்தியை குத்தி அவரது பக்தியின் முக்தியை முத்திரையாக பதித்துவிட்டார்....
இதே நம்மூரா இருந்திருந்தா சாக்கடையில பீர் ஆறு ஓடினாலும் போலிஸ் வர்றதுக்குள்ள நம்ம குடிமகன்கள் பாய்ஞ்சி நீந்திருப்பாங்களே
// சாக்கடைக் கால்வாயில் பீர் ஆறு ஓடியிருக்கிறது. //
கண்கள் கலங்கிவிட்டன...
அனைத்துப் பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.
ஆசிய பசிபிக் நாடுகளில் உள்ள பல நடை முறைகள் , நம் தமிழ் நாட்டு கலாச்சாரங்களின் பிரதியாக இருக்கிறது. இங்க இருந்து அங்க போச்சா , இல்ல அங்க இருந்து இங்க வந்துச்சா?
நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011
Cool Dudes with swrods in their mouths!!!!
ராஜேஷ், iPhone4S வாங்கினால் அப்புறம் iPhone5 கிடைக்காதே...
//கண்கள் கலங்கிவிட்டன...//
Philo, நீங்கள் இவ்வளவு பெரிய "குடி"மகன் என்று தெரியாமப் போச்சே...
//இராஜராஜேஸ்வரிsaid...
அனைத்துப் பகிர்வுகளும் அருமை. பாராட்டுக்கள்.//
உங்களைப் போன்றோர்களின் பின்னூட்டங்கள் மேலும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று என்னைத் தூண்டுகிறது. நன்றி ராஜெஸ்வரி..
இளயதாசன், நிச்சயம் இங்கிருந்து தான் அங்கு சென்றிருக்கும். மற்றய தேசத்தவர்கள் எல்லாம் காட்டுவாசிகளாய் திரிந்து கொண்டிருந்த போதே நாங்கள் நாகரிகத்தின் உச்சிக்குப் போய் விட்டோம்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.
சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
mayoo, What happened to your spelling missy?
இன்னும் சில படங்கள் இருந்தது. ஆனால் எனக்கே பயமாயிருந்தது...
நான் ரசித்த வரி இது.. இயல்பாய் வந்து விழுந்ததால்.
பீர் ஆறு! பாவம் குடிமகன்கள்..
வணக்கம் சகோதரி இன்றுதான் முதன்முறையாக தங்கள் தளத்திற்கு
வந்துள்ளேன் .வாழ்த்துக்கள் சிறப்பான ஆக்கங்கள் தங்கள் தளத்தினில்க்
கண்டேன் .மிக்க மகிழ்ச்சி இனி முடிந்தவரை தங்கள் ஆக்கத்திற்கு கருத்திடுவேன் .நன்றி பகிர்வுகளுக்கு .சந்தர்ப்பம் கிட்டும்போது முடிந்தால் வாருங்கள் என் தளத்திற்கும் இது என் அன்பான வேண்டுகோள் .
கத்தி குத்திங்க் சம்பிரதாயத்தால சாக் ஆயிட்டேன்....
நல்ல பகிர்வுகள்.சுவாரசியமாக இருந்தது.
தொடர் வருகைக்கு நன்றி... ரிஷபன். உங்கள் அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்.
உங்களுக்கும் என் வணக்கங்கள் அம்பாளடியாள். தமிழ் மேல் நீங்கள் கொண்டுள்ள பற்று மென்மேலும் பெருகட்டும். உங்கள் வலைத்தளத்திற்கு வருகை தந்தேன்.
மிக அருமையான கவிதைகள். இனி அடிக்கடி சந்திப்போம்...
நன்றி விஜயன். தொடர்ந்து வருகை தந்து கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
Post a Comment