அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
iPhone 4S வெளியீடு மிகவும் விமரிசையாக உலகெங்கும் கொண்டாடப் பட்டிருக்கிறது. 80 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்து முதலாவதாக வாங்க வேண்டும் என்று ஒருவர் வாங்கியிருக்கிறார். வீடியோவைப் பாருங்கள் விளங்கும்... வார்த்தைகள் தேவையில்லை.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஒர் அரிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துள்ளது. அதானப்பட்டது என்னவென்றால் பல் விளக்கின பின் வாயைத் தண்ணீரால் கொப்பளிக்கக்கூடாது என்பது தான். அவர்கள் சொல்கிறார்கள் வாயைக் கொப்பளிப்பதால் பல மணி நேரங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய பல் பசைப் படை வெளியில் துப்பப்படுகிறது. அதனால் இதைத் தவிருங்கள் என்கிறார்கள். நம்ம பசங்க மாசம் ஒரு தரம் தான் பல்லு விளக்குவானுங்க என்ற அரிய உண்மை இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தெரிஞ்சால் இப்படிப் பட்ட ஆராய்ச்சிமுடிவெல்லாம் சொல்ல மாட்டார்கள்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1906ம் ஆண்டிலிருந்து HongKongல் Harbour Race என்ற கடல் நீச்சல் போட்டி நடந்து வந்தது. Kowloonல் உள்ள Lei Yue Mun என்ற இடத்திலிருந்து Hong Kong தீவிற்கு நீந்த வேண்டும். 1978ம் ஆண்டு கடல் மிகவும் மாசடைந்துள்ளதால் இனி இப்போட்டி நடக்காது என்று அறிவிக்கப்பட்டது. 33 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு கோலாகலமாக மீண்டும் இப்போட்டி ஆரம்பித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடலின் மாசு குறைந்திருப்பதால் வரும் காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் போட்டி தொடரும் என்று தெரிகிறது. வெற்றி என்பதை விட 100 வருட பாரம்பரியத்தைக் காப்பாற்றுகின்றோம் என்ற மகிழ்ச்சியே முக்கியம் என்கிறார்கள் சீன மக்கள். எனக்கென்ன சந்தேகம் என்றால் ஆண்டுக்காண்டு அதிகரித்து தான் வருகிறது. அப்படியிருக்க 33 வருஷத்திற்கு முன்னால் இருந்ததை விட இப்போது எப்படி கடல் சுத்தமானது?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
8 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
அருமையான மாயக்கண்ணாடி பிம்பகளுக்குப் பாராட்டுக்கள்.
33 வருஷத்திற்கு முன்னால் இருந்ததை விட இப்போது எப்படி கடல் சுத்தமானது?/
என்க்கு ஆச்சரியமே அத்தனை நடமாட்டமிக்க இடத்தில், நிறையா ஹோட்டலக்ளும் கடலை ஒட்டியே இருந்தும் அந்தக்கடல் பகுதி சுத்தத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன்.
குப்பை போடுபவர்களுக்கு அபராதமும், தண்டனையும் உண்டாம்.
கடலை தூய்மை படுத்தியிருப்பார்கள்.
தகவலுக்கு நன்றி ராஜராஜேஸ்வரி...
என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்துவிட்டீர்கள்...
என்னவெல்லாம் கண்டு பிடிக்கிறாங்க பாருங்க...
பல்துலக்கி விட்டு அப்படியே இருந்தால் எப்படி இருக்கும்.
நினைத்துப் பார்க்கவே கொஞ்சம் பயமாத் தான் இருக்குது.
அரிய பல செய்திகளை தொகுத்திருக்கிறீர்கள் சகோதரி.
பகிர்வுக்கு நன்றி.
இன்றுமுதல் உங்கள் வலையில் நானும்...
Colourful mayakannadi!
நன்றி மகேந்திரன் அண்ணா...
இப்படியான பாராட்டுகள் தான் ஒவ்வொருமுறையும் வித்தியாசமான செய்திகளைக் கொடுக்க வேண்டும் என்ற என் தேடலை அதிகரிக்கிறது.
Thank you, Suguna.
எங்கே ரொம்ப நாளா காணவில்லை..?
அந்த anonymous நான்தானுங்கோ!!!
அந்த குட்டிப் பாப்பா விழப் போவுது.. பிடிங்க!
பல் விளக்கினப்புறம் கொப்பளிக்கக் கூடாதா.. கடவுளே.. அப்புறம் காப்பி குடிச்சா அத்தனையும் வயித்துக்குள்ள தான போவும்?
Post a Comment