Sunday, 9 October 2011

மாயக்கண்ணாடி - 09/10/2011

அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சைனாவில் உள்ள ஸொங்குவா கோட்டை பிகவும் பிரபலமான சுற்றுலாத் தளம். ஆனால் உள்ளே செல்வதற்கு £2.50 மதிப்பில் கட்டணம் செலுத்த வேண்டும். கோட்டையைச் சுற்றி 70 அடிக்கு மதில் சுவர் உள்ளது. மா ஜெய் என்ற சீனப் பெண் கட்டணம் கொடுக்காமல் உள்ளே போக வேண்டும் என்பதற்காக அந்த மதிலில் லாவகமாக ஏறிக் கடப்பதை ஒரு சுற்றுலாப் பயணி பார்த்துப் படம் பிடித்து விட்டார். ஒரு ஆட்டுக்குட்டி போல் கட கடவென மேலே ஏறி விட்டாள் என்று சான்று வேறு கொடுத்திருக்கிறார். மா ஜெய் செய்வதை பார்த்து வேறு சிலரும் முயற்சிக்க, ஒருவர் கீழே விழுந்து காலை உடைத்து விட்டார். இருவர் நடுவில் நின்று கொண்டு தத்தளிக்க மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் மா ஜெய் - “அந்தப் பயணி என்னைக் கவனித்து இருக்காவிட்டால் இது ஒரு பெரிய விடயமாகவே ஆகியிருக்காது. நான் இந்தப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவள். நான் இந்தக் கோட்டைக்கு ஒரு போதும் பணம் செலுத்தி வந்ததில்லை” என்று சர்வ சாதாரணமாகச் சொல்கிறாள். ஆனால் மேல் நாட்டுப் பத்திரிக்கைகள் இவருக்கு "Spider Woman" என்று சரியாகத்தான் பெயர் வைத்துள்ளனர்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஐம்பதிலும் ஆசை வரும் என்பார்கள். இந்தப் பாட்டிக்கோ நூறிலேயே ஆசை வந்திருக்கு. ஐக்கியராஜ்ஜியத்தில் 100 வயதை அடைபவர்களுக்கு அன்றைய தேதியில் ராணியின் கையொப்பமிட்ட வாழ்த்து மடல் வரும். அதோடு வேறு என்ன விசேஷமாக வேண்டும் என்று இந்தப் பாட்டி, Clare Ormistonனிடம் இவர் மகள் கேட்டதற்கு... எனக்கு stripper ஒருவரைப் பார்க்க வேண்டும் என்று ஆசை, இது வரை நிறை வேறவில்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே அவர் மகளும் ஏற்பாடு செய்து கொடுக்க... பிறகென்ன பாட்டியின் 100வது பிறந்த நாள் 3 பிள்ளைகள், 3 பேரப்பிள்ளைகள், 2 பூட்டப்பிள்ளைகலுடன்  வெகு விமரிசையாகக் கொண்ட்டாடப்பட்டது.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பந்தாவிற்கு பிள்ளைகளை வெளி நாட்டிற்கு அனுப்பிவிட்டு, பின் அவர்களைப் பிரிந்து ஏக்கப்படும் அப்பாக்களை டெல்லி கணேஷ் அப்படியே முன் கொண்டு வந்து நிருத்திவிடுகிறார். அந்தக் குட்டிப் பையனின் சில்மிஷங்களும் பிரமாதம்.:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இந்த வாரத் தத்துவம்....

Never Argue with a fool, onlookers may not be able to tell the difference.

8 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

மாய உலகம் said... Best Blogger Tips

ஸ்பைடர் உமனை பாராட்டுவதா...?

மாய உலகம் said... Best Blogger Tips

பாட்டியின் ஆசை நிறைவேறிடுச்சு... பாட்டிக்கு பாராட்டுக்கள்.. அதை நிறைவேற்றி தந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said... Best Blogger Tips

காணொளியை பிறகு வந்து பார்க்கிறேன் சகோ!

ஷர்மி said... Best Blogger Tips

தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி ராஜேஷ்...
தமிழ்மணத்தில் முதல் 20 இடங்களுக்குள் வந்ததற்கு வாழ்த்துக்கள். பூங்கொத்து பரிசு...

ஷர்மி said... Best Blogger Tips

ஏன் சிறுகதையைப் படிக்கவில்லை ராஜேஷ்?

Anonymous said... Best Blogger Tips

பாட்டி 100 வயதில் ஆசை 100 வகை என்பதை நிரூபித்துவிட்டார்!

நம்ம ஊரு தென்னை மரத்தில் ஏறவே எனக்கெல்லாம் பயம்... அவர்களையே `ஆ` என்று பார்ப்பேன்...இவளை என்னவென்று சொல்ல!

யாரிடமெல்லாம் என்னால் என் கருத்தை வெளியிட முடியவில்லையோ, அல்லது அவர்கள் வெளியிட வாய்ப்பு தரவில்லையோ..அப்போது இந்த தத்துவம் என்னை சமாதனப்படுத்தும் :)

மாயக்கண்ணாடி பிம்பத்தை அழகாகக் காட்டுவதால், மீண்டும் மீண்டும் பார்ப்பேன்!!!

நன்றி மாயக்கண்ணாடியின் சொந்தக்காரரே....

Anonymous said... Best Blogger Tips

சொல்ல மறந்துவிட்டேன்.. டெல்லி கணேஷ் நான் எப்பவும் விரும்பும் நடிகர்! அவரைப் பாரட்டும் நிலையை எல்லாம் எப்பவோ கடந்து விட்டார்!
எனக்கு இதில் பிடித்தக் காட்சி என்னவென்றால், அந்த சிகரெட்டைப் பிடிப்பதுப் போல் பிடிக்காமல் இருப்பது.

துருவ நட்சத்திரம்: வெளிச்சம்

ஷர்மி said... Best Blogger Tips

ஹலோ Anonymous தோழா/தோழி, உங்கள் வருகைக்கு நன்றி. கருத்துக்களுக்கும் நன்றி... ஆனால் உங்கள் பெயரை வெளியிட்டால் நல்லா இருக்குமே...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget