இந்த வாரத்தில் முந்தைய காலங்களில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை இங்கே தொகுத்துள்ளேன்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நவம்பர் 20
- 1947ம் ஆண்டு முடிக்குரிய இளவரசி எலிசெபத்தின் திருமணம் நடைபெற்றது.
- 1985ம் ஆண்டு மைக்ரோசொஃப்ட் நிறுவனம் Windows 1.0 வெளியிட்டது.
- 2003ம் ஆண்டு மைக்கெல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
- 1926ம் ஆண்டு கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இங்கிலாந்தின் தலையீடு இல்லாமல் சுயமாக இயங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நவம்பர் 21
- 1985ல் புகழ்பெற்ற Fireside Summit அமெரிக்க அதிபர் ரீகனுக்கும் ரஷ்ய அதிபர் கோர்பாசேவிற்கும் இடையில் இரு நாடுகளுக்குமான சமாதான ஒப்பந்தம் நடைபெற்றது.
- 1910ல் பிரபல எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் காலமானார்.
நவம்பர் 22
- 1963ல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னெடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1918ல் முதன்முறையாக 100 பெண் காவலர்கள் லண்டன் மாநகரில் ரோந்துக்கு சென்றார்கள்.
- 1980ல் 250கிலோ எடை கொண்ட ரிமோட் கொண்ட்ரோல் குண்டு வெடித்ததில் லெபணான் அதிபர் மொஅவாட் கொல்லப்பட்டார்.
- 2005ல் அஞ்செலா மேர்கெல் முதலாவது ஜெர்மானிய பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
- 1946ல் லைட்ஸ்லோ பைரோ என்பவரால் பால் பாயிண்ட் பேனாக்கள் விற்பனைக்கு வந்தது.
நவம்பர் 23
- 1852 ஐக்கிய ராஜ்ஜியத்தில் முதன் முறையாக சாலையோர தபால் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- 1963ல் BBCனால் முதல் முறையாக “டாக்டர் ஹூ” ஒளிபரப்பப்பட்டது.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நவம்பர் 24
- 1991ம் ஆண்டு 70 மற்றும் 80களில் உலகைக் கட்டிப் போட்ட Queens Bandன் பிரபல ராக் அண்ட் ரோல் பாடகர் Freddie Mercury ஏயிட்ஸ் நோயினால் காலமானார்.
- 1963ல் கென்னடியைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட ஒஸ்வால்ட் என்பவன் இன்று ஜாக் ரூபி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
- 1859ல் சார்ல்ஸ் டார்வின் கூர்ப்பைப் பற்றிய தன் ஆராய்ச்சி நூலான "Origin of the Species"ஐ வெளியிட்டார்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நவம்பர் 25
- 1963ல் கென்னடியின் இறுதி ஊர்வலமும் நல்லடக்கமும் நடைபேற்றது.
நவம்பர் 26
- 1954ல் ஈழத்தில் வல்வெட்டித்துறை மண்ணில் தமிழர்களின் பெருந்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார்.
- 1983ல் ஒர் கொள்ளையர் குழு Heathrow Airportல் இருக்கும் Brinks-Mat Securityன் பண்டகசாலைக்குள் (warehouse) நுழைந்து அன்றைய நிலையில் £25 மில்லியன் மதிப்புடைய தங்கத்தை அபகரித்துச் சென்றனர். அலார்ம் நிறுத்தப்பட்டு, உள்ளேயிருந்த 6 காவலாளிகளைக் கட்டிப் போட்டு விட்டு 1 மணி நேரம் சாவகாசமாக நேரம் செலவழித்து நடத்தி முடித்தனர். UKன் மிகப்பெரிய கொள்ளை இது தான்.
16 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
விஜயகாந்த் தோத்துடுவார்...
நவம்பர் 26 - தமிழர்கள் மறக்க முடியாத ஒருநாள்... நீங்க மறந்துட்டீங்க...
@Philosophy Prabhakaranநம்ம லொள்ளு சபாவில் அவரைப் பற்றி போடலாமா என்று குழம்பிட்டு விட்டுட்டேன். உங்கள் ஊக்கத்தினால் இப்போது சேர்த்துவிட்டேன். நன்றி Philo...
@Philosophy Prabhakaranஏன் விசியகாந்தைப் பற்றி இங்கே சொல்றீக... வெளங்கலையே...
@Philosophy Prabhakaranநானும் அவர் பிறந்த அதே வல்வை மண்ணில் பிறந்தவள் தான். ஒரே ரத்தம். என்னைப் பார்த்து "நீங்க மறந்துட்டீங்க"ன்னு சொல்லிட்டீங்களே Philo... நியாயமா?
பிகு: எங்க அப்பா போட்டோ பாருங்க அதே சாயல் தெரியும்.
@ஷர்மி
// ஏன் விசியகாந்தைப் பற்றி இங்கே சொல்றீக... வெளங்கலையே... //
உங்க புள்ளிவிவரத்தை சொன்னேன்...
@ஷர்மி
// நானும் அவர் பிறந்த அதே வல்வை மண்ணில் பிறந்தவள் தான். ஒரே ரத்தம். என்னைப் பார்த்து "நீங்க மறந்துட்டீங்க"ன்னு சொல்லிட்டீங்களே Philo... நியாயமா?
பிகு: எங்க அப்பா போட்டோ பாருங்க அதே சாயல் தெரியும். //
சரி விடுங்க மேடம்... உங்க டாடி போட்டோ எங்கே இருக்கு...?
@ஷர்மி
// நம்ம லொள்ளு சபாவில் அவரைப் பற்றி போடலாமா என்று குழம்பிட்டு விட்டுட்டேன். உங்கள் ஊக்கத்தினால் இப்போது சேர்த்துவிட்டேன். நன்றி Philo... //
இது எனக்கு வெளங்கல... இன்னா மேட்டர்...?
தகவலுக்கு நன்றி
வணக்கத்துடன் :
ராஜா
விஜய் மற்றும் அஜித் இணைந்து வழங்கும்…..
@Philosophy Prabhakaranஅடப்பாவி... எங்க அப்பா போட்டோவைப் பார்க்காமல் "IQ அதிகமாக..?" என்ற இடுகையை எப்படி வாசித்து முடித்தீர்?
@Philosophy Prabhakaranபோடலாமா வேணாமான்னு குழம்பிட்டு விட்டுட்டேன். ஆனால் முதலாவதா வந்த நம்ம நண்பரே கேட்டுட்டாரே... மற்றவர்களும் அதையே எதிர்பார்ப்பார்கள் தானே என்று தான் இணைத்துவிட்டேன்.
@"என் ராஜபாட்டை"- ராஜாவருகைக்கு நன்றி நண்பரே...
அந்த நாள் தகவல்கள் ஆனாலும் படிக்கும்போது சுவாரசியம். தபால் பெட்டியைப் பார்த்து பெருமூச்சு விட்டேன். பின்னூட்டங்களில் அழகாய் ஒரு கதை இருக்கிறது..
உங்கள்பதிவு யாரை வேண்டுமானாலும் நீங்கள் போடலாம். ஆனால் அது என்ன தமிழர்களின் பெருந்தலைவர்?
@ரிஷபன் பிரபாவுடன் பேசத் துவங்கினால் இப்படித் தான் சார், நிறைய கதைகள் வரும்.
@baleno தமிழர்களின் பெருந்தலைவர் இவர் அன்றி வேறு யார்... தமிழர் வரலாறு தெரிந்த எவரும் இப்படியான கேள்வி கேட்டிருக்க முடியாது. முகத்தையோ சொந்த அடையாளத்தையோ வெளியிட முடியாத சிலர் தான் இப்படியான கேள்விகள் கேட்டிருக்க முடியும். குலம் அறுக்க வந்த கோடரிக் காம்புகள்...
Post a Comment