அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
20 படிகள் ஒன்றாக ஏறினால் மூச்சிறைக்கும் எனக்கெல்லாம் இந்தப் பாட்டியைப் பார்த்தால் பெருமூச்சு தான் விட முடியும். 91 வயதாகும் இந்தப் பாட்டி தான் உலகிலேயே வயது கூடிய யோகா பயிற்றுனர். Floridaல் இருக்கிறராம். பெயர் Bernice Bates. 1960ம் ஆண்டிலிருந்து யோகாசனம் செய்கிறாராம். இப்போதும் வாரம் ஒரு முறை வகுப்புகள் நடத்துகிறார். தன் சாதணையை யாரேனும் முறியடித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். அந்தம்மாவிற்குத் தெரியும் யாரும் கிட்ட நெருங்கக்கூட முடியாதுன்னு...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஒரு ஜட்டிக்குள் எத்தனை பேர் போகலாம்? கேட்கவே ஒரு மாதிரி இருக்கில்லெ.. ஆனால் இது ஒரு கின்னஸ் சாதனை. லண்டனில் இருக்கும் உயரமான கட்டடம் ஆன கேனரி வார்ஃப் (Canary Wharf) முன்னால் தங்கள் உள்ளாடைகளோடு நின்ற 50 பேர் ஒரே ஜட்டிக்குள் போய் சாதணை புரிந்துள்ளனர். எல்லோரும் ஜோரா ஒரு முறை கைதட்டுங்கள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Peppa Middletonஐ யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். கேட் வில்லியம் திருமணத்திற்கு பின் அக்காவை விட தங்கை பெப்பாவைத் தான் papparaziகள் துறத்துகிறார்கள். இது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கலக்கத்தக் கொடுக்கிறது என்று செய்திகள் வெளிவருகிறது. இதற்கு Diana-esque என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதுவும் அவர் நீண்ட நாள் காதலரான Alex Loudon உடனான பிரிவின் இது அதிகரித்துள்ளது. இங்கு இருப்பவர்களுக்கு பெப்பா பற்றி கவலையில்லை. அமெரிக்கர்களுக்குத் தான் பெப்பாவைப் பற்றி அறிய ஆவல் என்று தாங்களே சப்புக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
70களில் ஐக்கியராஜ்ஜியம் முழுதும் உள்ள பெட்டிக்கடைகள் மளிகைக்கடைகள் எல்லாம் தெற்காசியர்களால் வாங்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட்து தான் Asian Trader என்ற பத்திரிக்கை. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பொருட்கள், விநியோகஸ்தர், கடை முதலாளிகள் என்பவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டின் Editor's Choice Awardஐ பெற்றது ஒரு தமிழர், இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிவா கந்தையாவாகிய இவரின் மினி சுப்பர் மார்க்கேட் லண்டன் கலவரத்தின் போது சூரையாடப்பட்டு எரிக்கப் பட்டது. அதிலிருந்து மீண்டு தன் வியாபாரத்தை மீண்டும் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தமைக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தமிழர்களை வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் தழைப்பார்கள் என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உருமி திரைப்படத்தில் வரும் இந்தப் பாட்டை நேற்றுத் தான் கேட்டேன். அதன் பின் எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே எண்ணிக்கை மறந்துவிட்டது.
ஷ்ரேயா கோஷல் குரலென்றால் எனக்கு உயிர். ஆனால் ஒரு பெண்ணை வர்ணிக்கும் பாடலை இந்தளவு நான் ரசிப்பென் என்று நினைக்கவில்லை. பாடலைக் கேட்டவுடனேயே கவிதை வரிகளுக்குள் தொலைந்துவிட்டேன். பின் தேடிய போது தான் வைரமுத்து எழுதியது என்று அறிந்தேன். “முன்னழகு மதயானை, பின்னழகு மதுப்பானை” விரசமில்லாமல் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்... நீங்களும் மயங்குங்களேன்....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;
12 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
வயதுக்கு சாதனை தடையில்லை...
தன்னம்பிக்கை இருந்தால் போதும்...
ஒரே ஜட்டிக்குள் ஐம்பது பேர்!!
அடக் .. கொடுமையே ...
கவிப்பேரரசுவின் வரிகளை சொல்லவேண்டுமா சகோதரி..
புடம் போட்ட தங்கமல்லவா...
இன்றைய மாயக்கண்ணாடி மிக அருமை சகோதரி...
@??????????
அந்தத் தன்னம்பிக்கையை வளர்ப்பது தான் அண்ணா பெரும் பாடு...என் முந்தையப் பதிவொன்றில் ஆடை இல்லாமல் ஆயிரம் பேர் வந்தார்கள். அதை விட 50 பேர் சேர்ந்து ஜட்டி போடுவது பரவாயில்லை என்று நினைக்கிறேன்...
பாராட்டிற்கு நன்றி அண்ணா...
இம்முறை மாயக்கண்ணாடியைப் பற்றி என்ன விமர்சனம் வரும் என்று குழம்பியிருந்தேன். உங்கள் வார்த்தைகள் பார்த்துத் தான் நிம்மதியடைந்தேன்...
அந்தம்மாவிற்குத் தெரியும் யாரும் கிட்ட நெருங்கக்கூட முடியாதுன்னு...
கிரேட்! அவங்களுக்கு ஒரு சல்யுட்.
கின்னஸ் சாதனை மிரட்டல் சிரிப்பு.
மீண்டும் தலை நிமிர்ந்த தமிழரின் சாதனைக்கு சலாம்!
மாயக்கண்ணாடி அருமை சகோ
யோகா பாட்டிக்கு போட்டியா யாரும் வர வாய்ப்பில்லை.... இந்த வயதிலும் ஆச்சர்யம் தான்... எல்லாம் யோகாவின் மகிமை....
உறுமி படப் பாடலும் பாடல் வரிகளும் அருமையாக உள்ளது....
மாய கண்ணாடி சுவாராஷ்யமான நிறைய செய்திகளை சொல்கிறது சகோதரி... வாழ்த்துக்கள்.
தன் சாதணையை யாரேனும் முறியடித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்று போட்டுத் தாக்கியிருக்கிறார். அந்தம்மாவிற்குத் தெரியும் யாரும் கிட்ட நெருங்கக்கூட முடியாதுன்னு.../
மாயக்கண்ணாடி தந்த அருமையான
பகிர்வுகள்.. பாராட்டுக்கள்!
அருமை
அன்புடன் :
ராஜா
அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
@ரிஷபன்
@மாய உலகம்
@இராஜராஜேஸ்வரி
@”என் ராஜபாட்டை”-ராஜா
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..
Post a Comment