Sunday 6 November 2011

குழந்தைக்குள் ஏன் இந்தக் குரூரம்..?


எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவராவதும்,
தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...!!

எனக்கு மிகவும் பிடித்த பாடல். புதிய பெற்றோர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது நான் உதாரணமாக மேட்கோள் காட்டும் வரிகள். இவ்வளவு காலமும் ஒருவருடைய குணத்தை நிர்ணயிப்பது மரபணுக்களாக இருந்த போதும் அதை சூழ்நிலை காரணிகளால் கட்டுப்படுத்தலாம் என்றே விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். அதாவது வளரும் காலத்தில் என்ன விதமான போதணைகள் பழக்க வழக்கங்கள் காலநிலைக் காரணிகள் என்பவற்றால் ஒரு குழந்தை பாதிக்கப் படுகிறதோ அதன் படியே அதன் உடல் மன வளர்ச்சிகள் இருக்கும் என்று கருத்து நிலவியது. ஆனால் இப்போது Cambridge மற்றும் Oxford பலகலைக் கழகங்கள் தனித்தனியாக நடத்திய ஆராய்ச்சியில் இது தவறு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

குழந்தைகள் பிறக்கும் போது இருக்கும் குண நலன்களை வெளிக்காரணிகள் பெரிதாக பாதிக்க முடியாது. அவர்கள் பிறப்பு genesகளே வெற்றி கொள்ளும் என்கிறார்கள். முன்பு விளக்கம் கூற முடியாமல் இருந்த பல விடயங்களுக்கு இந்த முடிவின் மூலம் பதில் காணலாம். உள உணர்வுகளைக் கட்டுபடுத்தும் genesகளை நாம் மாற்ற முடியாது. அதனால் அது அந்த நபருக்கு கடைசிவரை தன் சுய குணத்தைத் தான் அனுப்பிக் கொண்டிருக்கும். அதீத மனக்கட்டுப்பாடு உள்ளவர்களால் மட்டுமே தவறு சரி என்பதைப் புறிந்து கொண்டு அந்த எண்ணத் தூண்டல்களை அடக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் அதற்கு அடிபணிந்தே போவார்கள்.


Chromosomes என்பது DNAயினால் ஆன நூல் போன்ற கட்டமைப்பு. DNAயில் தான் genes என்று சொல்லப்படும் மரபணுக்கள் உள்ளது. ஒவ்வொரு geneம் உடலின் மனதின் ஏதோ ஒரு அமைப்பின் காரணியாக இருக்கும். உங்களுக்கு புற்றுநோய் வருமா வராதா? உயரமானவரா, குள்ளமானவரா? கறுப்பா, சிவப்பா? முன்கோபியா, பொறுமைசாலியா? விளையாட்டு வீரரா, ஓவியரா? இப்படி உங்களை மில்லிமீட்டர் மில்லிமீட்டராக செதுக்குவது இந்த genesகள் தான். ஒவ்வொரு மனிதனிலும் 23 சோடி chromosomes உள்ளது. சோடியில் ஒன்று அப்பாவிடமிருந்தும் மற்றது அம்மாவிடமிருந்தும் வரும். ஒவ்வொரு மனித chromosomesகளிலும் 400லிருந்து 4200 geneகள் உள்ளது. இப்படி 23 சோடி chromosomes. யோசித்துப் பாருங்கள் எத்தனைவிதமான combinations உருவாகும் என்று. இதனால் தான் உலகில் ஒரே மாதிரி இரண்டு நபர்கள் இருப்பதில்லை. இதனால் தான் எனக்கும் என் சகோதரங்களுக்கும் இடையிலேயே அவ்வளவு வேறுபாடு.


அப்படியாக தாய் தந்தையிடமிருந்து மூதாதையர் யாருக்கோ இருந்த குணங்கள் கடத்தப்படும் போது வெளிக்காரணிகள் அவற்றின் மேல் பெரிய கட்டுப்பாட்டை செலுத்த முடியாது என்கிறார்கள். நல்ல வளர்ப்பில் இருந்தாலும் அவர்கள் பிறவிக் குணம் தான் ஜெயிக்கும் என்பது ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது. நல்ல பண்பான தாய் தகப்பனுக்கும் தருதலையான பிள்ளைகள் பிறப்பதற்கும் நல்ல பண்பான பிள்ளைகள் தவறான குடும்பங்களில் பிறப்பதற்கும் இது தான் காரணம்.



 இப்படியாக குலுக்கல் முறையில் மரபணுக்கள் கடத்தப் படுவதை Human Lottery என்று அழைக்கிறார்கள். அதில் பம்பர் பரிசு கிடைப்பதும் போட்ட முதலை விட அதிகம் செலவழிப்பதும் அவர் அவர் தலையெழுத்து.

எதுவாக இருந்தாலும் தமிழில் “அடி மேல் அடி அடித்தால் அம்மிக் கல்லும் நகரும்” என்பார்கள். அப்படி எந்த விதமான குழந்தைகளுக்கும் நற்குணங்களையும் சிந்தணைகளையுமே விதைப்போம். பெரிய விருட்சமாகா விட்டாலும் சின்னச் செடியாகவவாவது முளைக்கும் அல்லவா? 


இதனால் தான் நம் மூதாதையர் திருமணங்களை நிச்சயிக்கும் போது 2, 3 தலைமுறைகளைப் பற்றி விசாரித்தார்கள். ஆனால் எதையும் விளக்கமாக நமக்கு எழுதி வைக்காமல் சென்று விட்டார்கள். இப்போது இவர்கள் அதே விஷயத்தை எங்களுக்கு புதிதாக சொல்கிறார்கள். கேட்டுக்கொள்ள வேண்டியது தான்!!

13 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

sugi said... Best Blogger Tips

7ம் அறிவு தாக்கம் :)

Thozhirkalam Channel said... Best Blogger Tips

வாழ்த்துக்கள்..

மகேந்திரன் said... Best Blogger Tips

அருமையான கட்டுரை சகோதரி..
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்காது..
நல்ல எண்ணங்களை விதைத்தால்
நாளை வளர்ந்து விருட்சமாக நிற்கையில்
பலன் கை மேல் கிடைக்கும்
இல்லையேல் தலை மீது தான் கிடைக்கும்....

அழகிய கட்டுரைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

மேடம் இப்போதுள்ள சூழ்நிலையில் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினில் மட்டுமல்ல... இதில் சமுதாயத்தின் பங்கு பெருமளவில் இருக்கிறது...

Unknown said... Best Blogger Tips

DNA, நோக்குவர்மம் அப்படி இப்படின்னு கதை விட்டு காசை எடுத்துட்டு இருக்காங்க சில பேர். உண்மையிலேயே டி.என்.ஏ.-ன்னா என்னன்னு பாடம் நடத்திட்டீங்க. அருமையான தகவல்களை அழகாத் தந்தமைக்கு நன்றி தோழி.

ரிஷபன் said... Best Blogger Tips

இப்படியாக குலுக்கல் முறையில் மரபணுக்கள் கடத்தப் படுவதை Human Lottery என்று அழைக்கிறார்கள். அதில் பம்பர் பரிசு கிடைப்பதும் போட்ட முதலை விட அதிகம் செலவழிப்பதும் அவர் அவர் தலையெழுத்து.

நுட்பமான பதிவு.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

அப்படி இல்லை சுகி. இந்த செய்தி என் காதில் எட்டி 4-5 நாட்களாகியும் நேரம் கிடைக்காமல் தாமதமாகத் தான் எழுதினேன்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி Cpede news.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

உங்கள் கருத்து மிக சரி. நன்றி மகேந்திரன் அண்ணா.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நீங்கள் சொல்வது சரி தான் philo. ஆனால் அந்த சமுதாயத்தின் கையில் சிக்கிச் சீரழியாமல் காப்பது அன்னையின் கையில் தான் இருக்குது...

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வணக்கம் வெண்புரவி, முதல் முறையாக எங்க தளத்திற்கு வந்திருக்கீங்க. வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க மேடம்.
மனம் திறந்த பாராட்டுக்கும் நன்றி தோழி...

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

//நுட்பமான பதிவு.//

நன்றி ரிஷபன்.

Unknown said... Best Blogger Tips

யோசிக்க வேண்டிய விடயம் தான் ஆனால் இதற்கான மூல ஆதாரத்தை எங்கிருந்து பெற்றுக் கொண்டீர்கள் என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் வாழ்த்துக்கள். ஒரு மனிதனுடைய வாழ்வியலில் DNA தாக்கம் என்பது மிகவும் குறிப்பாக சொல்லப்பட வேண்டியதுதான்.

இனி வரும் காலங்களில் ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தாயா? சமூகமா? DNAவா? என்ற பட்டி மன்றங்கள் நடக்கலாம்.

# எந்த விதமான குழந்தைகளுக்கும் நற்குணங்களையும் சிந்தணைகளையுமே விதைப்போம். பெரிய விருட்சமாகா விட்டாலும் சின்னச் செடியாகவவாவது முளைக்கும் அல்லவா?#

நிச்சயாமாய் மாற்றம் உண்டாகும்

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget