பலரும் IQ, IQன்னு பேசிக்கிறாங்களே அப்படின்னா என்னனு யோசித்து பார்த்திருக்கிறீர்களா? IQ அதிகமாக...?
IQ - Intelligent Quotient - Intelligence அதாவது புத்திசாலித்தனத்தை அளவிடும் சோதணைகளில் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய சார்புப் புள்ளிகளேயாகும். அவரவர் வயதிற்கு ஏற்ப இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும். இதை வைத்துக் கொண்டு 3 வயது சிறுமியையும் 45 வயது மனிதரையும் ஒப்பிடலாம். சராசரி மனிதர்களுக்கு IQ 100 என்று மதிக்கப்படுகிறது. அதனால் 100ஐ விட அதிகமாக IQ உள்ளவர்கள் சராசரியானவர்களை விட அதிக மூளைத் திறன் உடையவர்கள் என்றும் 100ஐ விட குறைவாக மதிப்புகள் எடுப்பவர்கள் சராசரியை விட குறைவான மூளைத் திறன் படைத்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. 130ற்கு மேல் IQ உடையவர்கள் அருட்பெற்றவர்கள் (giftedன் நேரடித் தமிழ் பெயர்ப்பு) என்றும் 70ற்கு குறைவாக உடையவர்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்றும் கருதப்படுகிறது.
Mr. Lewis Terman என்ற மனோதத்துவ நிபுனர் 1916ம் ஆண்டு IQ என்பதைப் பற்றி முதலாவதாகப் பேசி அந்த சொற்பிரயோகத்தையும் கொண்டு வந்தார். அவருடைய கணிப்புகள் தான் தற்காலத்திலும் பயன் படுத்தப்படுகிறது. அவர் சொல்கிறார்...
IQ of Over 140 - Genius or near genius
IQ of 120 to 140 - Highly intelligent
IQ of 110 to 119 - Very intelligent
IQ of 90 to 109 - Normal or average intelligence
IQ of 80 to 89 - Dullness
IQ Rating of 70-79 - Borderline deficiency
IQ Ratings Under70 - Definite feeble-mindedness
IQ அதிகமாக அதிகமாக அவர்கள் சுற்றியிருக்கும் உலகத்தினை விட்டு விளகும் தன்மை அதிகரிக்கிறது. மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதையோ அவர்கள் தரும் புகழாரமோ முகஸ்துதியோ அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. இப்படி மற்றவர்களைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாததால் இவர்களுக்கு Social Life பெரிதாக இருக்காது. (எந்திரன் படத்தில் வரும் விஞ்ஞானி ரஜனியின் கதாப்பாத்திரத்தை நினைத்துப் பாருங்கள்.) இவர்கள் எதைப் பற்றியும் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக பேசிவிடுவார்கள். முக்கியமாக தங்கள் நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் புரம்பான கருத்துகள் முன் வைக்கப்படும் போது ஆக்ரோஷமாக எதிர்ப்பார்கள். They are born perfectionists (for what they care about). உயர் IQ உடையவர்கள் பெரிய விஷயங்களில் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருப்பதால் அன்றாட வாழ்க்கையில் ஞாபக மறதி அதிகமாக இருக்கும். அவர்கள் எந்த ஒரு துறையிலும் ஆர்வமாக இறங்கினால் அதன் ஆதி அந்தம் காணாமல் ஓய மாட்டார்கள்.
பாடசாலைக்ளிலேயே இவர்களின் பிரச்சிணை ஆரம்பித்து விட்டது. வேகமாக பாடங்களைக் கிறகித்து விடுவதால் ஆசிரியர்கள் மெதுவாகப் போகும் போது போர் அடித்துப் போய் ஒன்று எடக்குமுடக்காய் கேள்வி கேட்பார்கள் அல்லது ஏதாவது சில்மிஷம் செய்து திட்டு வாங்குவார்கள்.
DNA மாத்திரம் இல்லை, சூழல் காரணிகளும் ஒருவரின் மூளையின் செயல் திறனைப் பாதிக்கும். குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்காமல் உடல் வளர்ச்சி குன்றிப் போய் அதனால் அவன் செயல்திறன் குறைவதைச் சொல்லலாம். அதனால் தான் படித்த அறிவாளிப் பெற்றோர்களின் குழந்தைகளும் உயர் செயல்திறனுடன் இருக்கும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. அவர்கள் சிறு வயதில் இருந்தே அவனைத் தூண்டி பல விடயங்களில் ஆர்வத்தை தூண்டுகிறார்கள். ஆனால் DNAல் தான் உயர் IQ அதிகமாக தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
IQக்கும் படிப்பிற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. எனக்குத் தெரிந்த 2 மாணவிகள் இருந்தார்கள். ஒருத்திக்கு உயர் IQ. பாடசாலை முடிந்து வீடு வந்தால் புத்தகம் தூக்கமாட்டாள். மற்றவளுக்கு பாடசாலையில் உடனே விளங்காவிட்டாலும் விடியற்காலையில் எழுந்து பாடங்களைப் மனனம் செய்து விடுவாள். இறுதிப் பரீட்சையில் இருவரும் சிறப்பாக ஒரே மதிப்பெண் பெற்றனர். வராது என்று விடாமல் முயற்சி எடுக்கும் எல்லோருமே வெற்றி பெருவார்கள். என்ன high IQ இருப்பவர்கள் கொஞ்சம் எளிதாக அதை அடந்து விடுவார்கள். உயர் IQக்கும் அவர்கள் கல்வித் தகமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். வசதி வாய்ப்பு, வாழும் சூழ் நிலை, எடுக்கும் முயற்சி என்பவற்றைப் பொறுத்துத் தான் ஒருவரின் கல்வி அமையும்.
இப்படி நல்லதும் கெட்டதும் கொடுக்கும் உயர் IQ உடைய நபர்களுக்கென்று 1946ம் ஆண்டு Roland Berrill, Dr. Lance Ware என்ற சட்டத்தரணிகள் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இதில் Dr. Ware ஒரு விஞ்ஞானியும் கூட. உலகின் IQ அள்வீட்டில் முதல் 2%ற்குள் வரும் நபர்களை இதில் அங்கத்தவர்களாக சேர்த்துக் கொண்டனர். இதன் மூலம் இப்படியான நபர்கள் ஒன்று கூடி தங்கள் அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தனர். இன்றும் இந்தக் கழகம் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. Truck driverல் இருந்து நாட்டின் பெரிய விஞ்ஞானி வரை அங்கத்தவர்களாக உள்ளனர். இரண்டரை வயதுப் பெண்ணில் இருந்து 105 வயதுப் பெண் வரை அங்கத்தவர்களாக உள்ளனர். வயது, இன, மொழி, பால் பேதம் இல்லை. 140ற்கு மேல் IQ உள்ளவர்களைத் தான் அங்கத்தவர் ஆக்குவார்கள். MENSA Member என்றாலே அவர் புத்திஜீவி என்பது விளங்கிவிடும்.
இப்படித் தான் இருந்தேன்.. |
அதெல்லாம் சரி... ஷர்மி அக்கா ஏன் திடீரென்று IQ, MENSA என்றெல்லாம் அளக்கிறாரே என்று பார்க்கிறீர்களா? எல்லாம் ஒரு தற்பெருமை தானுங்கோ..
சென்ற வாரம் என் IQ சோதிக்கப்பட்டு என்னையும் MENSA அங்கத்தவர் ஆக்கிடாய்ங்கோ.... அன்று முழுதும் நெஞ்சு முட்டிய பெருமை. என் அப்பா அம்மாவிற்குத் தான் எல்லாப் புகழும் பெருமையும் சமர்ப்பணம்.
ராதாஜெயலக்ஷ்மி விஜயராஜா தம்பதியினர் அம்மா அப்பா |
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஐம்பதாவது இடுகை இது. எனக்கு நானே பேசிக் கொண்டிருந்தவள் நான். இந்தத் தளத்தின் மூலம் உங்கள் எல்லோரோடும் பேச வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு நான் என் தோழி சுகிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். நான் 2007ம் ஆண்டே bloggerல் இணைந்துவிட்டேன். ஆனால் எதுவும் எழுதவில்லை. என்னை உற்சாகப்படுத்தி இந்த வலைத் தளத்தை மெருகூட்டியது அவள் தான். நன்றி சுகுணா.
22 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
எனக்கு நானே பேசிக் கொண்டிருந்தவள் நான். இந்தத் தளத்தின் மூலம் உங்கள் எல்லோருடும் பேச வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.//
வாங்க பழகலாம் பழகலாம்....!!
50 வது இடுகைக்கு நல்வாழ்த்துகள்.
IQ வில் தேர்வாகி அங்கத்தினர் ஆனதற்கும்..
ஹை என் ப்ரெண்ட் ஐக்யூ அதிகம்னு காலரைத் தூக்கி விட்டுக்கறேன்..
//வாங்க பழகலாம் பழகலாம்....!!//
பழகலாம் பழகலாம்...
//ஹை என் ப்ரெண்ட் ஐக்யூ அதிகம்னு காலரைத் தூக்கி விட்டுக்கறேன்..//
என்னையும் ப்ரெண்டாக ஏற்றதற்கு நன்றி ரிஷபன்...
முதலில் வாழ்த்துக்கள்...
IQ பற்றி இவ்வளவு சொன்னவர், வாசகர்கள் தங்கள் IQவை சோதித்துக்கொள்ளும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாமே...
இந்த வார பிரபா ஒயின்ஷாப்பில் உங்கள் வேண்டுகோளுக்கிணங்க ஒரு மாற்றம்...
வாழ்த்துகள் அக்கா! IQ of Over 140 - Genius or near genius
so நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள list ல் இணைகிறீர்கள்! நீங்கள் IQ அதிகமுள்ளவர்களின் character-ஐப் பற்றி விவரித்துள்ள அனைத்தையும் நான் வழிமொழிகிறேன்! முற்றிலும் உண்மையோ உண்மை! நான் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறேன் என்றால், என் கண்ணால் முன்னால் உள்ள நீங்களே சான்று! இம்மியும் பிசகாமல் நீங்கள் ஒத்துப் போகிறீர்கள்!
நீங்கள் என்னை உங்களதுப் பணியாளராக நினைக்காமல், தோழியாகப் பழகுவது எனக்கு நன்றாகப் புரியும்...ஆனால் உங்களது 50- வது பதிவில் இவ்வளவுப் பெரிய மனதுடன், என்னைக் குறிப்பிட்டதற்கு, நன்றிகள் பல பல!
ஆனால் அந்த நன்றிக்கு முழுமையானவளா என்றால், இல்லை என்றுதான் சொல்வேன்...அது உங்களின் பிறவி அறிவு அக்கா! நீங்கள் மேன்மேலும் பல வெற்றிகளை அடைய கடவுள் ஆசிர்வதிப்பாராக!
நன்றி!
வலைத்தளங்களில் இருக்கும் இலவச IQ Testகள் எந்தளவிற்கு நம்பிக்கையானது என்று தெரியவில்லை, Philo. அதனால் தான் அப்படியான link எதுவும் போடவில்லை.
வாழ்த்துக்களுக்கு நன்றி Philo.
உங்கள் ஒயின் ஷாப்பிற்குத் தான் போகிறேன். அங்கு சந்திப்போம்...
ஆசிர்வாதங்களுக்கு நன்றி சுகி...
நிறைகுடம் தழும்பாது...
அன்புநிறை சகோதரி,
தங்களின் ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
இக் வில் தேர்வாகி அங்கே அங்கம் வகிப்பதற்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள்..
நான் செய்யும் செயலெல்லாம் என் தாய் தந்தை கொடுத்தது என்று
அங்கே ஒரு முத்தைப்பாய் தாய் தாந்தையருக்கு நன்றி சொன்னீர்கள் பாருங்கள்...
அது அதுதான் நம் கலாச்சாரம்...
அனைத்துக்கும் என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி..
வாழ்த்துக்கள் பல.
வாழ்த்துக்கள் பல ஷர்மி..
கேபிள் சங்கர்
மகேந்திரன் அண்ணா உங்களின் தொடர் வருகையும் தொடர் பின்னூட்டங்களும் எனக்கு ஊக்குவிப்பாய் இருந்தது. மிகவும் நன்றி அண்ணா.
“எல்லாப் புகழும் இறைவனுக்கே..”
ஆனால்
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.”
ஐய்யோ!!
கனவா நிஜமா?
கேபிள் சார் என் பக்கத்திற்கு வருகை தந்திருக்கிறார்.
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்...
எங்களையும் அப்பப்ப ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் கேபிள் சார்...
இந்த மாதிரி IQ அதிகமா இருக்கறவங்கள எங்க ஊர்ல வேற பேர் சொல்லிக் கூப்பிடுவாங்க. அந்தப் பேர் மறந்து போச்சுங்க. ஞாபகம் வந்துச்சுன்னா சொல்றனுங்க.
கந்தசாமி ஐயா... என்னை வைச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே நீங்க?
//இதன் மூலம் இப்படியான நபர்கள் ஒன்று கூடி தங்கள் அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தனர்.//
அவர்கள் பகிர்வதை எங்களுக்கும் பகிருங்கள் உங்கள் பதிவின் மூலமாக.
ஐம்பதுக்கு வாழ்துக்கள்.
நிச்சயமாக இளயதாசன். சுவாரசியமான விஷயங்கள் அனைத்தும் பகிரப்படும்...
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
ஓ... இந்த சென்டிமென்ட் பிட்டை போட்டது நீங்கதானா... யாருடைய வலைப்பூவிலோ பார்த்த ஞாபகம்... உங்க வலைப்பூ என்று நினைவில் இல்லை...
வாழ்த்துக்கள் ! பதிவு நன்றாக உள்ளது!!
Post a Comment