Tuesday, 13 December 2011

மாயக்கண்ணாடி - 13/12/2011அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சொகுசாய் பயணம் செய்த நாய்
John Jupp என்ற டாக்ஸி ஓட்டுனருக்கு அவரது நெடுங்கால வாடிக்கையாளரான ஒரு பெண்மணியிடம் இருந்து அழைப்பு வந்தது. உங்கள் வண்டியில் நாய்களை ஏற்றுவீர்களா என்று கேட்டிருக்கிறார் அந்த அம்மையார். இவர் ஆமாம் என்றதும், சரி என் நாயை நீங்கள் சென்று அழைத்து வர வேண்டும் என்று கூறினார். சரி, விலாசத்தைத் தாருங்கள் என்ற போது தான், அந்த அம்மா வலு சாதரணமாக மேட்ரிட்(Madrid, Spain) என்று சொல்லியிருக்கிறார். இருவரும் ஒருவாறு பேசிக் கொண்டு மொத்தமாக 2000 மைல் தூரம் சென்று டாக்ஸியிலேயே அந்த நாயைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜான். புதன் கிழமை காலை 4 மணிக்கு தொடங்கியது அவர் பயணம். மொத்தம் 38 மணி நேரப் பயணம். நாய்க்கு வந்த வாழ்வைப் பார்த்தீர்களா... ஆனால் கடைசி வரை ஜான் எவ்வளவு கூலி வாங்கினார் என்று மட்டும் யாரும் சொல்லவே இல்லை. கேட்டால் மாரடைப்பு வந்து விடும் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. 


அந்த அதிர்ஷ்டக்கார டாக்ஸி ஓட்டுனர்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


இந்த வாரம் லண்டனில் கடும் குளிர். ஆனால் அந்தக் குளிரிலும் பிரபலமான கென்சிங்டன் தெருவில் இருக்கும் Virgin Holiday Shopன் முன் இப்படி ஒரு கூட்டம். Virgin நிறுவனம் Package Holidaysக்கு பேர் போனது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மத்தத்தில் தள்ளுபடி விற்பனை நடத்துவார்கள். அதற்கான முன் பதிவு செய்பவர்களைத் தான் இப்படி நீச்சல் உடையுடன் வரச் சொல்லியிருக்கிறார்கள். நீச்சல் உடையுடன் queueவில் அதிகமான நபர்கள் நின்ற சாதனைக்காகவே இதை நடத்தியிருக்கிறார்கள். தள்ளுபடி என்றவுடன் வாயைப் பிளக்கும் கூட்டம் இங்கும் உண்டு. உடனே அணி திரண்டு விட்டார்கள். நான் கடவுளைத் தான் கும்பிட்டேன். நல்ல வேளை பிறந்த மேனியுடன் queueவில் நில்லுங்கள் இலவச டிக்கட் தருகிறோம் என்று யாரும் அறிவிக்கவில்லை என்று.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: சினிமாவில் நடப்பதெல்லாம் இப்ப நிஜமாகிட்டு வருதுங்க. நம்ம லாரன்சு படத்தில் வர்ற “மாட்டுப் பயல்”(Cow Boys) கதை மாதிரி ஓடுற ரயிலில் இருந்து 60 டன் சோளமும் சக்கரையும் திருடப்பட்டிருக்கு, பிரேசில் நாட்டில். தண்டவளங்களில் grease தடவப் பட்டு, அதன் மேல் ரயில் செல்லும் போது சில்லுகள் வழுக்கி வேகம் குறைந்த போது வேறு ஒரு Tow Truck வைத்து ஒவ்வொரு பெட்டியாகக் கழட்டிக் கொண்டு போய்விட்டார்கள். யார் செய்தார்கள், எப்படி செய்தார்கள் என்று போலிஸிற்கு இன்னும் விளங்கவில்லையாம். இதில் என்ன கூத்தென்றால் திருடியவர்கள் அந்தப் பொருட்களை தாங்களே பாவிக்கப் போகிறார்களா இல்லை விற்கப்போகிறார்களா என்று தெரியவில்லை என்று குற்றத்தை பிடிக்க நியமித்திருக்கும் காவல் துறை உயர் அதிகாரி பேட்டி கொடுத்திருக்கிறார். கேஸ் வெளங்கின மாதிரித் தான்.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::பாரதியார் பிறந்த நாளுக்காக ட்விட்டரில் கூவிய குருவிகளில் எனக்குப் பிடித்தவை சில இங்கே...@siva_says - தமிழ் இனிச் சாகும்-னு நீ எந்தக்கோபத்தில் சொன்னாயோ நானறியேன். ஆனால் உன் பாடல்கள் உள்ள மட்டும் அது நடவாது!

@paramesh2006 -  பாரதியையும் வள்ளுவனையும் ஒழுங்காக படித்திருந்தால் உலகத்தையே தமிழன் ஆட்சி செய்திருப்பான்-சுகி.சிவம்.

@Tottodaing - என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்,என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?

@tamizhanban08 - மகாகவியின் பிறந்ததினத்தில் டுவிட்டரின் டிரண்டை கைப்பற்ற தவறிவிட்டோமே மக்களே? தமிழ்டுவிட்டர்களுக்கு என்னாச்சு?

@erode_kathir - பாரதியின் எழுத்தில் வழியும் கம்பீரமே, அவரை வரைந்திருக்கும் அனைத்து ஓவியங்களிலும் வெளிப்படுகிறது

@thoatta - கவிஞர் வைரமுத்து எழுதிய 'கவிராஜன் கதை' படியுங்கள், பாரதியோடு செல்லமாளையும் புரிந்து கொள்வீர்கள்.! 


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

8 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

டூ பீஸ் படத்தில் உரித்த வாழைப்பழங்களை விட...
குளிருக்கு போர்த்திய கோட்டுக்குள்ளிருந்து...
எட்டி பார்க்கும் மங்கையின் முகமே என்னைக்கவர்ந்தது.

[நல்லவன் மாதிரி நடிப்பதற்க்கு எவ்வளவு கோடூரமா பொய் சொல்ல வேண்டியிருக்கு...]

ரிஷபன் said... Best Blogger Tips

நல்ல வேளை.. பாரதியைப் பத்தி போட்டிருக்கு..

உன் பாடல்கள் உள்ள மட்டும் அது நடவாது!

சபாஷ்.. இந்த ரௌத்திரம் பிடிச்சிருக்கு..

மகேந்திரன் said... Best Blogger Tips

38 மணிநேரம் மகிழ்வுந்துப் பயணம் நாய்க்கு
கொடுத்து வைச்ச நாய் தான்...

காலக்கொடுமைடா சாமி.. தள்ளுபடின்னாலும்
இப்படியா ...

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
என நிரூபித்திருக்கிறார்கள். (திருட்டில் கூட)

முண்டாசுக் கவி பற்றிய கருத்துக்கள்
அனைத்தும் அற்புதம் சகோதரி....

சங்கர் நாராயண் @ Cable Sankar said... Best Blogger Tips

நான் உங்களை மாதிரியில்லை உ.சி.ரசிகன். நேர்மையானவன்.

எனக்கு அந்த டூபீஸ் தான் பிடிச்சிருக்கு என்ன வருத்தம்னா.. அதை இங்க போட்டோல பாக்க வேண்டியிருக்கேன்னுதான். ம்ஹும். நமக்கில்லை.. கிடைக்காது.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

என்னை மாதிரி சின்னப்பசங்க படிக்கற மாதிரி ஃபோட்டோ போடுங்க, பதிவு போடுங்க ஹய்யோ அய்யோ ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

அட ட்விட்டர்ல இருக்கீங்களா> ஐ மிஸ்டு , ஓக்கே ஃபாலோடு..

பாரதி ட்வீட்ஸ் கலக்கல்ஸ்

அஞ்சா சிங்கம் said... Best Blogger Tips

லண்டன் வாசிகள் மிகவும் புத்திசாலிகள் ....
ஹ்ம்ம் ...............நம்ம ஊருலயும்தான் தள்ளுபடி விற்பனை வருஷா வருஷம் போடுறாங்க ..என்ன பிரயோஜனம் ....

ஷர்மி said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
ஐ ஃபாலோடு டூ...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget