Sunday, 18 December 2011

Sherlock Holmes: A Game of Shadows - ஹாலிவுட் கொண்டாட்டம்


நூறாண்டுகளுக்கு மேலாக உலகைக் கட்டிப் போட்ட துப்பறியும் நிபுணர் Sherlocks Holmesன் பல படங்கள் இதற்கு முன் பல தசாப்தங்களாக எடுத்து வந்த் போது 2009ம் ஆண்டு Robert Downey Jnr நடித்து வெளி வந்த Sherlock Holmes திரைப்படம் தான் அவரை முழுதாகக் காட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது இரண்டாவது வெளியீடு...கதைக்கு வருவோம்... 1890ல் நடக்கின்றது... உலகெங்கும் தொடர் கொலைகளும், குண்டு வெடிப்புகளும் நடந்து கொண்டிருக்கின்றது. யாரும் அவற்றிற்கு இடையிலான தொடர்புகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க, நம் ஷேர்லாக் மட்டும் அவை அனைத்தையும் Professor Moriarty என்பவருடன் தொடர்பு படுத்தி விடுகிறார். அந்த மொரியார்டி ஒரு ஆயுதத் தொழிற்சாலை வாங்கியிருப்பதையும் அதனால் ஆயுதங்களுக்கான கேள்வியை அதிகரிப்பதற்காக உலகப் போரை ஆரம்பிக்க வைக்கவே புத்திசாலியாகக் காய் நகர்த்துவதையும் கண்டு பிடிக்கிறார்.


இது வரை தான் கண்டிருந்த குற்றவாளிகள் போல் இல்லாமல் தான் சிந்திக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு படி முன்னாலெ போய்க் கொண்டிருக்கும் மொரியார்ட்டியை எவ்வாறு வீழ்த்தி உலகைக் காப்பாத்துகிறார் என்பது தான் மீதிக் கதை.

சில வரிகளில் சொல்லி முடித்து விடக் கூடிய கதை தான். ஆனால் அதைப் படமாக்கியிருப்பதில் தான் எவ்வளவு பிரம்மாண்டம். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இருப்பதைப் போன்ற செட்டுகளும், உடைகளும், நடைமுறைகள் என்று அனைத்திலுமே அதிகக் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள underground tubeற்கான வேலைகள் அந்தக் காலப் பகுதிகளில் தான் நடந்தது. அதைக் கூட லாவகமாகக் காட்சிகளுக்கிடையில் கொண்டு வந்திருக்கிறார்கள். 


நம்ம மங்கத்தாவில் தலை அஜித் விளையாடும் சதுரங்கத்தைப் பார்த்து அசந்து போனவர்களுக்கு, இதில் ஷேர்லாக் மற்றும் மொரியார்டி விளையாடும் சதுரங்கத்தைப் பார்த்தால் தல சுற்றியே போய்விடும். ஷேர்லாக்கின் மதி நுட்பத்திற்கு இணையானவர் என்று மொரியார்டி சொல்லப்படுகிறார். இருவரும் கட்டங்களைப் பார்க்காமல் ஒருவர் ஒருவரின் கண்களைப் பார்த்த படி வாய் வார்த்தைகளாலேயே காய்களை நகர்த்துவார்கள். இதற்கு எவ்வளவு ஒரு ஞாபக சக்தியும் விளையாட்டு நுணுக்கமும் தெரிந்திருக்க வேண்டும். படம் பார்த்து இரண்டு நாளாகியும் இன்னமும் அந்த விளையாட்டைப் பற்றித் தான் சிந்தணை செல்கிறது.வேகமான சண்டைக்காட்சிகளும், கடைசிக் கட்ட துரத்தல் காட்சிகளில் துரத்தி வரும் குண்டுகளும் Slow Motionல் காட்டப்பட்டு மீண்டும் திடீரெனெறு வேகம் எடுப்பது பல படங்களில் பார்த்திருந்த போதும் இதில் அளவாக சரியான நேரங்களில் காட்டியிருப்பது கவரும் வகையில் அமைந்திருந்தது.

ஆனால் என்ன தான் இருந்தாலும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் என்றாலே மூளையைக் கசக்கி சூழலை உன்னிப்பாக அவதாணித்து துப்பறியும் ஒரு high intellectual thinking கொண்ட துப்பறிவாளராகத் தான் எனக்குப் பிடிக்கும். அவரை ஒரு சராசரி ஹீரோவாக்கியிருப்பது என்னால் ஏற்க முடியவில்லை. Arthur Conan Doyle சித்தரித்த ஷேர்லாக் இவர் இல்லை. 


13 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

வியபதி said... Best Blogger Tips

ஒரு high intellectual thinking கொண்ட துப்பறிவாளராகத் தான் எனக்குப் பிடிக்கும்.

எங்களுக்கும் அப்படித்தாங்க சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்

ராஜ் said... Best Blogger Tips

// அவரை ஒரு சராசரி ஹீரோவாக்கியிருப்பது என்னால் ஏற்க முடியவில்//
Sherlock Holmes முதல் பாகத்தை மட்டும் தான் நான் பார்த்துள்ளேன்....அதில் அவரின் Intelligence மிகவும் நன்றாக இருக்கும்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்து...நீங்கள் சொல்வதை பார்த்தால்... இந்த பாகம் அவ்வளவு Sherlock Holmes ரசிகர்களை கவராது...மற்றபடி விமர்சனம் நன்று...

கோவை நேரம் said... Best Blogger Tips

உங்க விமர்சனம் அருமை...இன்னும் இங்க ரிலீஸ் ஆகலையே

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் அக்கா,
நல்லா இருக்கிறீங்களா?

கதை நிகழ் காலத்தினைக் கண் முன்னே கொண்டு வரும் துப்பறியும் படம் பற்றிய அருமையான விமர்சனத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.

நான் நேரம் இருக்கும் போது பார்க்க ட்ரை ப்ண்றேன்.

மகேந்திரன் said... Best Blogger Tips

விமர்சனம் நல்லா இருந்துச்சு சகோதரி.

விக்கியுலகம் said... Best Blogger Tips

விமர்சனம் அருமை

ஷர்மி said... Best Blogger Tips

@வியபதி
உலகில் உள்ள எல்லா Sherlock Holmes அப்படித் தான் இருக்கிறோம் நண்பரே...

ஷர்மி said... Best Blogger Tips

@ராஜ்
இதுலும் அவர் intelligence காட்டப் பட்ட போதும் Jackie Chan ரேஞ்சுக்கு சண்டை போட விட்டிருக்கிறார்கள். அதுவும் சரசரி ஹீரோக்கள் போல் சுழன்று சுழன்று அடிக்கிறார். யதார்த்த சண்டையாக இல்லை. அது தான் கவலை.

ஷர்மி said... Best Blogger Tips

@கோவை நேரம்
@மகேந்திரன்
@விக்கியுலகம்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பர்களே...

ஷர்மி said... Best Blogger Tips

@நிரூபன்
எங்கே ரொம்ப நாளாக காணலே ஸார்? நலமாக இருக்கிரீர்களா?

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தம்பி..

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

மொக்கை படத்துக்கு....
சக்கையா விமர்சனம் போட்டு உள்ளீர்கள்.

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>ஆனால் என்ன தான் இருந்தாலும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் என்றாலே மூளையைக் கசக்கி சூழலை உன்னிப்பாக அவதாணித்து துப்பறியும் ஒரு high intellectual thinking கொண்ட துப்பறிவாளராகத் தான் எனக்குப் பிடிக்கும்.

I AGREE

அடடா, எங்க ஊர்ல இன்னும் ரிலீஸ்ஆகலையே?

ரிஷபன் said... Best Blogger Tips

இருவரும் கட்டங்களைப் பார்க்காமல் ஒருவர் ஒருவரின் கண்களைப் பார்த்த படி வாய் வார்த்தைகளாலேயே காய்களை நகர்த்துவார்கள். இதற்கு எவ்வளவு ஒரு ஞாபக சக்தியும் விளையாட்டு நுணுக்கமும் தெரிந்திருக்க வேண்டும்.

படிக்கும்போதே அந்த காட்சியை பார்க்கும் ஆவல் வருகிறது. நல்ல விமர்சனம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget