Monday, 12 December 2011

கோடீஸ்வரக் கொடையாளிகள்


வாழ்க்கையில் செல்வம் சேர்ப்பதை மட்டும் குறிக்கோலாகக் கொள்ளாமல் சேர்க்கும் பணத்தில் பெரும் பங்கை சமூக நலத் திட்டங்களுக்காகச் செலவிடும் நல் உள்ளங்களை ஆங்கிலத்தில் “Philanthropist” என்று அழைப்பார்கள். நேரடித் தமிழ் “பரோபகாரி”. அப்படியான சிலர் உதிர்த்த வார்த்தைகளின் தொகுப்பு...தன்னை ஒரு பரோபகாரி என்று காட்டிக் கொள்ள நினைக்கும் எந்த ஒரு செல்வந்தரும் தன் கொடைகளை தன்னைச் சார்ந்தவர்களில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக தன் தொழிலாளிகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களைக் கஷ்டப் படுத்தி சம்பாதிக்கும் செல்வத்தில் கோடி கோடியாகத் தானம் செய்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
~~~~~~~~~ B.C.Forbesபணத்தை மட்டும் கொடுக்காமல் அதனுடன் சேர்த்து எங்கள் நேரம், சக்தி, குரல் என்பவற்றை வழங்குவதன் மூலமே நாங்கள் விரும்பும் மாற்றங்களையும் நன்மைகளையும் பரப்பலாம்.
~~~~~~~~~~ Bill Gates
நான் சிறுவனாக இருந்த போது ஏழ்மையில் வாடினேன். எல்லாமே வேண்டும் என்று ஆசைப் பட்டேன். என்னிடம் பணம் வந்த போது பார்ப்பதை எல்லாம் வாங்கினேன். இப்போழுதோ எனக்கு எல்லாவற்றையுமே கொடுத்து விட வேண்டும் என்றே அவா எழுகிறது. யாருக்காவது எதையாவது கொடுக்கும் போது அவர்கள் முகத்தைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
~~~~~~~~~ Jackie Chan
 
 
 
என் மூன்று குழந்தைகள் உட்பட பலரும் தங்கள் நேரத்தையும் திறமைகளையும் மற்றவர்களுக்கு உதவுவதில் செலவழிக்கின்றார்கள். பணத்தை வாரி வழங்குவதை விட இதுவே சிறந்த கொடை. பரிதவிக்கும் ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ கை கோர்த்து நடந்து தன் கதைகளைக் கேட்கக் கூடிய நண்பனும், நல்வழிப் படுத்தும் ஆசானும் மிக முக்கியம். பணம் மட்டும் இதைக் கொடுக்க முடியாது.
~~~~~~~~~ Warren Buffett 
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 
என்னை அறியாமலே இந்த வள்ளல்களின் வார்த்தைகளை எழுதிய பின் மீண்டும் வாசிக்கும் போது தான் கவனித்தேன். இவர்கள் தாங்கள் உழைக்கும் செல்வத்தை ம்ட்டும் இல்லை, தங்கள் நேரத்தையும் இப்படியான நல்ல காரியங்களுக்காக செலவிடுகிறார்கள். இவர்களின் ஒவ்வோரு மணித் துளியும் நம்மைப் போன்றோர்களின் நேரத்தை விட 1000 மடங்கு பணம் குவிக்கும். அதனால் தான் அவர்கள் வள்ளலோ...?
 
என்னைப் பொறுத்தவரையில் யார் ஒருவன் வலக் கை கொடுப்பதை இடக் கைக்குத் தெரியாமல் கொடுக்கிறானோ அவன் தான் வள்ளல். அதைப் போல் 1000 ரூபாய் சம்பாதித்து விட்டு 10 ரூபா கொடுப்பவனை விட 100 ரூபா சம்பாதித்து விட்டு 10 ரூபாய் கொடுப்பவன் மிகப் பெரிய வள்ளல்.   

12 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Anonymous said... Best Blogger Tips

padhivu nandri namma kooththadigal idhil endha ragam

மகேந்திரன் said... Best Blogger Tips

அடடா.....
சம்பாதிச்சவங்க நல்லாத்தான் சொல்லியிருகாங்க..
ஏத்துக்க வேண்டியதுதான்.

தன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்று கணக்கு பார்த்து
செய்வது தர்மம் அல்ல..
தன் மனது சொல்வதை அப்படியே கொடுப்பதுதான் தர்மம்.

அழகான படைப்பிற்கு வாழ்த்துக்கள் சகோதரி.

suryajeeva said... Best Blogger Tips

கொடுக்க வேண்டும் என்ற மனம் எழுந்தாலே அவன் வள்ளல் தான்.. மாறாக வரிகுறைப்புக்காக வாரி வழங்குபவனை வள்ளல் என்று கூறுவது எனக்கு ஏற்புடையதாக இல்லை

அண்ணாமலையான் said... Best Blogger Tips

gud

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

இந்த பதிவு சம்மந்தப்பட்டது தான் கீழே உள்ள பதிவு.
பகிர்விற்கு நன்றி சகோ!

"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

ரிஷபன் said... Best Blogger Tips

இப்போழுதோ எனக்கு எல்லாவற்றையுமே கொடுத்து விட வேண்டும் என்றே அவா எழுகிறது. யாருக்காவது எதையாவது கொடுக்கும் போது அவர்கள் முகத்தைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
~~~~~~~~~ Jackie Chan

யார் கொடுத்தால்தான் என்ன. கொடுக்கும்போது வரும் சந்தோஷம் நாம் எடுக்கும்போது கூட வருவதில்லை..

ஷர்மி said... Best Blogger Tips

@Anonymous
Thank you

ஷர்மி said... Best Blogger Tips

@மகேந்திரன்
முழுதாக வாசித்து, சரியான கருத்து சொல்லும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.

ஷர்மி said... Best Blogger Tips

@suryajeeva
வெளி நாட்டில் வியாபரத்தில் ஈடுபட்டிருப்பதாலும், வரிகள் பற்றிய தெளிந்த நல்லறிவு இருப்பதாலும் சொல்கிறேன். வரிக்குறைப்பிற்காக வாரி வழங்கத் தான் வேண்டும் என்றில்லை. செலவுகளை அதிகரித்துக் காட்டினாலே போதும். இது பற்றி தனி இடுகையே போடலாம் நண்பரே.. அவ்வளவு நுணுக்கங்கள் இருக்கு. எனக்கு தெரிந்தது கோடி கோடியாகக் குவிக்கும் அவர்களுக்குத் தெரியாதா? அத்தோடு வாரி வழங்க வேண்டும் என்ற அந்த நினைப்பு எப்படி வந்தால் தான் என்ன? எல்லாம் நன்மைக்கென்றே நினைப்போம் நண்பரே...

ஷர்மி said... Best Blogger Tips

@அண்ணாமலையான்
@திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தோழர்களே...

ஷர்மி said... Best Blogger Tips

@ரிஷபன்
//கொடுக்கும்போது வரும் சந்தோஷம் நாம் எடுக்கும்போது கூட வருவதில்லை..//

அழகாக சொன்னீர்கள் நண்பரே

மதுமதி said... Best Blogger Tips

என்னைப் பொறுத்தவரையில் யார் ஒருவன் வலக் கை கொடுப்பதை இடக் கைக்குத் தெரியாமல் கொடுக்கிறானோ அவன் தான் வள்ளல்.

இதை நானும் ஒப்புக்கொள்கிறேன் சகோ.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget