Tuesday, 27 December 2011

மாயக்கண்ணாடி - 27/12/2011


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


Wim Hof என்ற இந்த டட்ச் நாட்டைச் சேர்ந்தவர் இது வரை 8 முறை உலக சாதணை செய்திருக்கிறார். இவருக்கு Ice Man என்ற பட்டப் பெயரும் உண்டு.

0 டிகிரியை விட குறைவான வெப்பநிலையில் ஆடைகள் இல்லாமல் இருப்பதே இவர் சாதணை. 52 வயதாகும் இவர் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்த படி -20 டிகிரியில் மரதன் ஓட்டம் ஓடியிருக்கிறார்.


ஐஸ் கட்டிகள் நிறைந்த தொட்டியில் 73 நிமிஷம் 48 வினாடிகள் இருந்திருக்கிறார். இவற்றையெல்லாம் நான் யோகாசனம் மூலம் பயின்ற மனக் கட்டுப்பாட்டினாலேயே செய்ய முடிகிறது என்று சொல்கிறார். அதற்கு "Mind over Matter" என்று பெயரும் வைத்திருக்கிறார்.

எவன் எவனோ எல்லாம் நம் நாட்டு கலைகளைப் பயின்று முன்னேறுகிறார்கள். நாம் எப்போது தூக்கத்திலிருந்து விழிக்கப் போகிறோமோ தெரியவில்லை?::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


பிரேசில் நாட்டில் பரா என்ற கிராமத்தைச் சேர்ந்த நசாரே என்ற பெண்ணிற்கு இப்படி இரண்டு தலைகளுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இமானுவேல், ஜீசஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள் ஒருவகையில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களே என்று மருத்துவர்கள் கேறுகிறார்கள். உடலின் பல பாகங்கள் இருவருக்கும் பொதுவாக இருப்பதால் பிரிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு குழந்தைகளுமே நல்ல ஆரோக்கியத்துடனே உள்ளனர். இரண்டு தலைகளுமே தாயிடம் பால் குடிப்பதாக சொல்லப்படுகிறது.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த மாயன் என்ற பழங்குடியினர் 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதியுடன் உலகம் அழிந்து விடும் என்று நம்புகிறார்கள். 1300 வருஷ பழைய கல்வெட்டு ஒன்று அவ்வாறு கூறுகிறதாம். ஆனால் அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் அடுத்த உலகிற்கு சந்தோஷமாகப் போவதற்கென்று விஷேட பூஜைகளும் நடனங்களும் விழாக்களும் நடத்தப் போகிறார்களாம். மெக்சிகோ அரசு இதை ஒரு வியாபாரத் தந்திரமாகப் பாவித்து வெளிநாட்டு விருந்தினர்களை தருவிக்கும் விஷயமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

சில ஆய்வாளர்கள், இவர்கள் கல்வெட்டைப் பிழையாகப் படிக்கிறார்கள். அது இந்துக்களின் முறைப்படி இருக்கும் ஒரு யுகத்தின் முடிவையே சொல்கிறது என்கிறார்கள். ஒரு வருடம் தானே பொருத்திருந்து பார்த்தால் யார் சொல்வது சரி என்று தெரிந்து விடும். என்ன நான் சொல்றது சரிதானே..?


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

என் மனம் கவர்ந்த பாடகன் கமல்ஹாசனின் குரலில் இந்தப் பாடல் என்னை அப்படியே மெய் மறக்கச் செய்துவிடும். ராஜா சாரின் இசையைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. மோகன், ஊர்வசி நடித்த ஓ மானே மானே என்ற திரைப்படத்தில் கமல் ஒரு பாடல் மட்டும் பாடியிருப்பார்.


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

10 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் அக்கா,
நல்லா இருக்கிறீங்களா?

விந்தையான மற்றும் ஆச்சரியமூட்டும் தகவல்களை மாயக் கண்ணாடியில் காட்சிப்படுத்தியிருக்கிறீங்க.

ஐஸ்கட்டியினுள் சாதனை...என்னா ஒரு கொல வெறி மனுசனா இருப்பாரு!

ரிஷபன் said... Best Blogger Tips

எவன் எவனோ எல்லாம் நம் நாட்டு கலைகளைப் பயின்று முன்னேறுகிறார்கள். நாம் எப்போது தூக்கத்திலிருந்து விழிக்கப் போகிறோமோ தெரியவில்லை?

Truth!

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க மேடம்...?

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

2012ல் ஆனந்த தொல்லை படம் வேறு ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்கிறார்கள்... அதனால் உலகம் அழியக்கூடிய வாய்ப்புகள் நிறையவே உள்ளன...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

உங்களுக்கு கமலஹாசன் இந்த அளவிற்கு பிடிக்கும் என்று தெரிந்திருந்தால் அன்றைய ஜொள்ளு செக்ஷனில் சூர்யாவிற்கு பதிலாக கமல் ஸ்டில்லை போட்டிருப்பேன்...

மதுமதி said... Best Blogger Tips

மாயக்கண்ணாடி மூலம் நிறைய விசயங்களை தெரிந்துகொண்டேன்..மாயன் காலண்டர் என்னதான் சொல்கிறது?காத்திருப்போம்..ஒரு வருடம் தானே.. வாழ்த்துகள்..

கோவை நேரம் said... Best Blogger Tips

மனதை கொள்ளை கொள்ளும் கண்ணாடி உங்க மாய கண்ணாடி...அரிய தகவல்கள்

மகேந்திரன் said... Best Blogger Tips

-20 டிகிரியில்
அடேயப்பா... மனுஷன் உடம்பு தோலால் செய்ததா..
இல்ல இரும்பால் செய்ததா?????

சரியாச் சொன்னீங்க சகோதரி.. நம்ம கலைகள் பற்றிய
விழிப்புணர்வு நமக்கு போதாதுதான்..

அதிசய இரட்டைப்பிறவிகள். நலமுடன் வாழ இறைவனை
இறைஞ்சுகிறேன்.

உலகம் அழிசிரும்னு எத்தனை பேர் தன் சொல்வாங்கன்னு
தெரியல.. அதுசரி கருத்துச் சுதந்திரம்...

அருமையான பாடல் சகோதரி..
கமலகாசனின் அந்த தகரக் குரல்
பாடலுக்கு வலு.

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

ஐஸ் மனிதன் யோகாவின் மகிமைக்கு எடுத்துக்காட்டு.
ரொம்ப நாள் யோகா கிளாஸ் போகாமல் கட்டடித்து வந்ததை
மிகத்தவறென்று உணர்த்தி விட்டான்.

ஆமினா said... Best Blogger Tips

எல்லாமே வித்தியாசமான தகவல்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget