Tuesday, 20 December 2011

மாயக்கண்ணாடி - 20/12/2011


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


வட கொரிய அதிபர் கிம் யொங்கில் மரணம் அடைந்தார். எனக்கு அவர் மரணித்தார் என்பது பெரிதாகப் படவில்லை. ஆனால் அந்த நாட்டு மக்கள் தரையில் விழுந்து புரண்டு அழுகிறார்கள். சர்வதிகாரி என்று பிறரால் சித்தரிக்கப்பட்ட மனிதர். மக்கள் ஏன் இவ்வளவு பாசம் காட்டுகிறார்கள்? எனக்கு விளங்கவில்லை. MGRற்கு பின் ஒரு அரசியல் தலைவரின் மரணத்திற்கு இப்படி உடைந்து போன மக்களை இப்போது தான் பார்க்கிறேன்.:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::UAEல் உள்ள Emirates Palace hotelல் தான் இந்த கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் காலம் எல்லோரும் மரம் வைப்பார்கள் தானே என்று நினைத்தால் அன்கே தான் நீங்க தப்பு பண்றீங்க... இந்த மரத்தின் மதிப்பு , £7.4 மில்லியன். இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 60 கோடி ரூபா. இந்த 40 அடி உயர மரம் என்னவோ அஞ்சரை லட்சம் ரூபா தானாம். அதுல தொங்கிறது எல்லாம் தங்கமும் வைரமும். தங்கத்தாலான பிரெஸ்லெட்கள், சங்கிலிகள், 181 வைரங்கள், மரகதங்கள், முத்துக்கள் மற்றும் பல அரிய கற்கள் பதிக்கப்பட்ட நகைகள்.

அங்கே திருடினால் கையை வெட்டி விடுவார்கள். அதனால் இப்படி பப்ளிக்காக தொங்க விட்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தா நம்மூர்ல வந்து மரம் வைக்கச் சொல்லுங்க பார்ப்போம்...

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


உலகிலே எதெதுக்கு எல்லாம் எக்ஸிபீஷன் வைக்கிறாங்க தெரியுமா? சைனாவில் சாக்கிலேட் எக்ஸிபீஷன். சாக்கிலேட் என்றவுடன் விதவிதமாக சாப்பிட என்று நினைத்து விடாதீர்கள். சாக்கிலேட்டிலேயே பொம்மைகள், பிரபலமானவர்களின் சிலைகள், பழைய அருங்காட்சியக மாடல்கள்... ஏன் உடைகள் ஆபரணங்களைக் கூட விடவில்லை. சாக்கிலேட்டினுள் ஒரு விஷேடப் பொருளைப் போட்டு இவ்வாறு உடையாமல் இருக்கச் செய்கிறார்களாம். ஆனால் அது என்னவென்று மட்டும் சொல்ல மாட்டார்களாம். கீழே இருக்கிற அக்கா போட்டிருக்கிறதெல்லாம் சாக்கிலேட். பிப்ரவரி மாதம் 19ம் திகதி வரை நடக்கிறதாம். முடிந்தால் போய் பாருங்கள்?:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உலகத் தரத்தில் மாடல்களாக இருக்கும் பெண்களின் படங்கள் கூட உண்மையானதாக இல்லை. அழகென்ற பெயரிலே ஒரு போலியான தோற்றமெ உலாவுகிறது. இந்தக் காணொளியைக் காணுங்கள் மேலும் விளங்கும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

அங்கே திருடினால் கையை வெட்டி விடுவார்கள். அதனால் இப்படி பப்ளிக்காக தொங்க விட்டிருக்கிறார்கள். தைரியம் இருந்தா நம்மூர்ல வந்து மரம் வைக்கச் சொல்லுங்க பார்ப்போம்

அதுதானே ..சரியான கேள்வி..

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

சர்வாதிகாரம் நல்லது... சர்வாதிகாரி நல்லவராக இருந்தால் மட்டும்...

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் தான் இருக்கிறது... ஒரு சிலருக்கு அந்த மேக்கப், போட்டோஷாப் வேலைப்பாடுகள் இல்லாத பெண்ணைக் கூட பிடித்திருக்கலாம்...

கோவை நேரம் said... Best Blogger Tips

காணொளி அருமை.,..இப்படிதான் எல்லாத்தையும் ஏமாத்து றாங்க

மதுமதி said... Best Blogger Tips

மாடல்களின் பித்தலாட்டங்களை காணொளியில் காண்பித்ததற்கு நன்றி..

மதுமதி said... Best Blogger Tips

நம் தளத்தில்

செத்தபின்புதான் தெரிந்தது..

ரிஷபன் said... Best Blogger Tips

கீழே இருக்கிற அக்கா போட்டிருக்கிறதெல்லாம் சாக்கிலேட். பிப்ரவரி மாதம் 19ம் திகதி வரை நடக்கிறதாம். முடிந்தால் போய் பாருங்கள்?

சாக்லேட்டே சாக்லேட் போட்டிருக்கிறதா..

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமை!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget