அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இண்டர்நெட், வெப் கமேரா என்பதெல்லாம் இல்லாமல் எப்படி வாழ்வதென்றே என் பிள்ளைகளுக்கு தெரியாது. ஆனால் அதை எப்படி உபயோகிப்பது என்று கூட தெரியாமல் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். வயதான தாத்தா பாட்டி தங்கள் பேரப்பிள்ளைகளுடன் பேசிப் பழகுவதென்றால் இணையம் தான் பல நேரங்களில் கை கொடுக்கின்றது. அப்படி ஒரு வயோதிப தம்பதியினர் வெப் காம் பற்றி தெரிந்து கொள்ளும் அந்த முதல் சில மணித்துளிகள் you tubeல் வெளியிடப் பட்டுள்ளது. வலை உலகம் முழுதும் இப்போ இது தான் பேச்சு.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சவுதி அரேபியாவில் தம்மானில் உள்ள மர்மார் என்ற உணவகத்தில் தேவைக்கு அதிகமாக உணவை வரவழைத்து விட்டு சாப்பிடாமல் மீதி வைத்தால், மீதி வைக்கும் உணவிற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ந்ண்பர்கள், உறவினர்கள் முன் வீன் ஜம்பதிற்காக உணவை வாங்கும் பழக்கத்தை நிறுத்தவே இந்தச் சட்டம் என்று உரிமையாளர் ஃபகாத் அல் அனேசி கூறியுள்ளார். உணவில்லாமல் பல கோடி மக்கள் அவதிப் படும் இக்காலகட்டத்தில் அதை மிச்சப் படுத்த எடுக்கும் ஒவ்வோரு நடவடிக்கையும் வரவேற்கத்தக்கதே...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
லண்டனைச் சேர்ந்த இந்த 5 வயதுப் பையன் Samuel Orola. பள்ளிக்கூடத்தில் விளையாட்டு மைதானத்தில் நடந்த ஒரு விபத்தில் இறந்து விட்டான். இங்கிலாந்து முழுவதும் கண்டணங்களும் துக்க அணுசரிப்பும் நடை பெறுகினற்து. வரவேற்கத்தக்க விஷயம் தானே என்று யோசிப்பீர்கள். ஆனால் என் மனமோ ஒத்தைப் புள்ளைக்கு இப்படி பதர்றீங்களே அங்கே எத்தனை பிஞ்சுன்னு எனக்கு கணக்குக் கூடத் தெரியலையே என்று தான் ஏங்குது் !!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இப்போ தமிழில் எவ்வளவோ ராப் பாடல்கள் வந்து விட்டது. ஆனால் அவை எல்லாத்துக்கும் தலை இதுதான்... அதுவும் என் மனம் கவர்ந்த இசையமைப்பாளர், நடிகர், பாடகர் மூவரும் சேர்ந்த என்னுடைய Favourite Cocktail.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
ஒரேபதிவில் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கீங்க. இது கூட நால்லாதான் இருக்கு. வாழ்த்துக்கள்.
மாயக்கண்ணாடி நல்லதொரு பிரதிபலிப்புத் தான்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்
//ஒரேபதிவில் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கீங்க. இது கூட நால்லாதான் இருக்கு. வாழ்த்துக்கள்.//
நன்றி அம்மா. உங்களைப் போல் பெரியவர்களின் வாழ்த்துக்கள் எனக்கு அவசியம் தேவை.
//மாயக்கண்ணாடி நல்லதொரு பிரதிபலிப்புத் தான்..//
நன்றி சகோதரா... உங்கள் வாழ்த்துக்கள் மேலும் எழுத தூண்டுகிறது.
Post a Comment