அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உலகிளேயே மிகப் பெரிய முதலை பிலிப்பைன்சு நாட்டில் பிடிபட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு 12 வயதுச் சிறுமி சிறிய படகொன்றில் வந்து கொண்டிருந்த போது பெரிய முதலை ஒன்று அவளில் பாதியைக் கடித்து விழுங்கியதை பார்த்த மக்கள் அதைப் பிடிப்பதற்காக தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். அண்மையில் மீண்டும் ஒரு விவசாயி பெரிய முதலை ஒன்றினால் விழுங்கப்பட்ட போது தேடுதல் அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவாகவே இந்த சாதணை முதலை பிடிப்பட்டது. 21 அடி நீளமான இந்த முதலையை 100 பேர் சேர்ந்தே பிடித்து இழுத்து வந்துள்ளனர்.
ஆனால் சிலர் சிறுமியை விழுங்கிய முதலை இதை விட பெரிதாக இருந்தது, அது இது இல்லை என்று பீதியைக் கிழப்பி விட்டிருக்கிறார்கள். அங்கும் இப்படியான ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Amelie Segarceanu என்ற ஆடை அலங்கார நிபுணர் இப்போது பூணைகளுக்கு விதவிதமான தொப்பிகள் செய்யும் தொழில் தொடங்கியிருக்கிறார். அவர் முன்பை விட இப்போது தான் தனக்கு வாடிக்கையாளர்களும் இலாபமும் கூடியிருப்பதாக சொல்கிறார். பூணைகளை எப்படி தாஜா பண்ணி ஆடை அலங்காரம் செய்ய வைப்பது என்று வகுப்பு வேறு எடுக்கிறாராம்.
என்ன கொடுமை சார் இது? எனக்கு நம்ம வைரமுத்துவின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது ~ “மாடி வீட்டு ஜன்னல் கூட சட்டையைப் போட்டிருக்கு, சேரிக்குள்ளே சின்னப் புள்ளே அம்மணமாய் இருக்கு”.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பலூன் பிடித்து நடப்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும் தான் ஆனால் இந்த மனுஷன், Jonathan Trappe பலூனைப் பிடித்துக் கொண்டு பறந்திருக்கிறார். 50 ஹீலியம் பலூன்களைக் கட்டிக் கொண்டு அல்ப் மலையைக் கடந்திருக்கிறார். பிரான்சு நாட்டில் கிளம்பி இதாலி பக்கம் வந்து இறங்கியிருக்கிறார். சாதித்து பேர் எடுக்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானால் செய்கிறார்கள்.
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
என்கிட்ட ஒன்னும் சொல்லல ..
pls remove word verification
ராஜா சார், சரியா காது கொடுத்து கேளுங்க, அது சொல்றது கேட்கும்!!
Word verification எல்லாம் ஒன்றும் இல்லை சார். எனக்குத் தெரிந்த தமிழில், அதுவும் பல வேலைகளுக்கு நடுவில், அவசரமாக blog போடுகையில் பிழைகள் ஏற்படுகிறது. மன்னிக்கவும்
மாயக்கண்ணாடி ஜாலம் காட்டுகிறது..
பின்னூட்டம் போடும்போது வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்கிறது.. அது பின்னூட்டம் போடுபவர்களுக்கு தொல்லை.
அதைத்தான் எடுக்கச் சொல்கிறார்..
நன்றி ரிஷபன். நான் வேறு பதிவில் நீங்கள் கொடுத்த பின்னூட்டத்தில் கேள்வி கேட்டுவிட்டு இங்கே வந்தால் அதற்கு பதில் இருக்கிறது. நன்றி ரிஷபன்.
Post a Comment