அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பிரேசில் நாட்டில் கணவன் மேல் சந்தேகபட்ட மனைவி Maria Simoes என்பவள், தன் கண்வனின் காதலி என்று நினைத்த பெண்ணை (Iranildes Aguiar Araujo) கொல்வத்ற்கு ஆள் அனுப்பியிருக்கிறாள். £345 பெறுமதியான பிரேசில் பணத்தை பெற்றுக்கொண்டு ஆவேசத்துடன் கொலை செய்யப் போண Carlos Roberto de Jesus, அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மயங்கிவிட்டான். அவளிடம் உண்மையைச் சொல்லிவிட்டு இருவரும் சேர்ந்து 2 Tomato Ketchup பாட்டிலின் உதவியுடன் இறந்தது போல் படம் எடுத்து சந்தேக மனைவியின் கையில் கொடுத்து விட்டார்கள். ஆனால் 2 நாட்கள் கழித்து இவர்கள் இருவரும் சாலையில் கட்டியணைத்த படி சென்றதை மரியா பார்த்ததும் தான் பிரச்சிணை ஆரம்பித்தது. அவள் போலீஸிடம் சென்று கார்லோஸ் தன்னிடம் $1000 திருடியதாக குற்றம் சாட்டியுள்ளாள். விசாரணையின் போது இந்த வண்டவாளம் எல்லாம் வெளி வந்திருக்கிறது. இதை விசாரித்த போலீஸ் அதிகாரி “என் இத்தனை வருட சேர்வீசில் இப்படி ஒரு கேசை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். அவரை தமிழ்நாட்டிற்கு மாற்றி விட்டால் இப்படி எல்லாம் வசனம் பேசமாட்டார். அரசியல்வாதிகளின் கேசுகளோடேயே அடங்கிப்போயிடுவார்.
Iranildes Aguiar Araujo |
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
உலகிலேயே பெரிய முதலை பிடிபட்டதாக சொல்லியிருந்தேனே, அவர் இப்போது பெரிய சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். 21 அடி நீளமும் 1 தொண் எடையும் இருக்கும் இவருக்கு “லோலொங்” என்று பெயரிடப்பட்டிள்ளது. தாய்லாந்து அரசாங்கம் இவரை ஒரு சுற்றுலா காட்சிப்பொருளாக வைத்திருக்க விரும்புகிறது. ஆனால் மிருக வதை தடுப்பு சங்கங்கள் அந்த முதலையை மீண்டும் அதன் பழைய இடத்திலேயே விட்டு விட வேண்டும் என்று சொல்கிறார்கள். கடைசியில் யார் ஜெயிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தானே...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அயிடா அலமிலோ என்ற பெண், பிரசவ தேதிக்கு இன்னும் 8 நாட்களே உள்ளது என்ற கட்டத்தில் Philippinesலிருந்து அமேரிக்காவிற்கு குடிபெயர்வதற்காக Philippine Airlinesல் ஏறியிருக்கிறார். அமெரிக்கா சென்றதும் குழந்தை பிறந்தால் அதற்கு அமெரிக்க பிரஜா உரிமை கிடைக்கும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஆனால் விமானம் நடு வானில் இருக்கும் போதே பிரசவ வலி எடுத்து குழந்தை பிறந்து விட்டது. சர்வதேச கடல் பரப்பின் மேல் பிறந்ததால் குழந்தைக்கு எந்த நாட்டு பிரஜா உரிமை என்று ஒரு சந்தேகம் எழுந்த போது அமேரிக்க குடியுரிமை அலுவலகம், குழந்தைக்கு இப்படியான பிரச்சிணை இருக்கும் போது, அதன் தாய் எந்த நாடோ அதுவே குழந்தைக்கும் சாரும் என்று தான் சர்வதேச சட்டங்கள் கூறுவதாக அறிவித்துள்ளது. பாவம் அய்டா பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிவிட்டது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சில பாடல்கள் கேட்டதுமே என்னைச் ஸ்தம்பித்து விடச் செய்து விடும். இரவில் இருளில் கண்களை மூடி இந்தப் பாடலின் இசையை ஒவ்வோரு சங்கதி சங்கதியாக எத்தனை முறை கேட்டிருப்பேனோ எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வோரு முறையும் மனதில் புதிதாக ஒரு சிலிர்ப்பை விட்டுச் செல்லத் தவறுவதில்லை.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இந்த வாரத் தத்துவம்...
In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends ~ Martin Luther King.
ஏன் இதை இந்த வார தத்துவமாக போடிகிறேன் என்றால்... வந்து சும்மா பார்த்து விட்டுப் போகாமல் பின்னூட்டமும் விட்டுச் செல்லுங்கள் என்று தான். ஹீ..ஹீ...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
//"In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends ~.//
உங்கள் மேற்கோள் படி 'நண்பர்களின் மௌனத்தைத் தானே நினைவு வைத்துக் கொள்வதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அதனால் வருபவர்கள் சத்தம் போடாமல் போய்விடப் போகிறார்கள். பாடலைக் கேட்டுக் கொண்டே என் பின்னூட்டத்தை பதிவு செய்தது ஒரு நல்ல இனிய அனுபவம்
அது அப்படி அர்த்தமில்லீங்கோ... பிரச்சிணைன்னு வந்துட்டா எதிரிகள் திட்டுர வார்த்தைகளை விட நம்ப நண்பர்கள் நமக்கு சார்பாக எதுவும் பேசாத்தது தான் ஞாப்கத்தில் நிற்கும்னு தாங்க அர்த்தம் எடுத்துக்கணும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி...
பல்சுவை அனுபவம்..
நன்றி ரிஷபன்.
Post a Comment