Thursday 15 September 2011

உயரம்னா பயமா?


சிலருக்கு 3-4 மாடி கட்டடத்தின் மேல் இருந்து பார்க்கவே தலை எல்லாம் கிருகிக் கொண்டு வருவது போல் இருக்கும். இப்படி உயரமான இடங்களைக் கண்டால் பயப்படுவதை அக்ரோஃபோபியா (Acrophobia) என்று சொல்வார்கள். ஆனால் அப்படியென்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.




அப்படி ஒருவர் தான் இந்த மரத் டுப்ரி என்ற 19 வயது வாலிபன். ஒரு நாள் நண்பனுடன் 33 மாடிக் கட்டடத்தின் மொட்ட மாடிக்கு போனதாகவும், அந்த அனுபவம் பிடித்திருந்ததால் தொடர்ந்து உயரமான இடங்களுக்கு செல்வதாகவும் சொல்லியிருக்கிறான். மேலும் அவன் பேட்டியில் “நான் மேலே இருக்கும் போது உலகமே என் காலடியில் இருப்பதாக உணர்கிறேன், என் பிரச்சிணைகள் எல்லாம் கீழே எங்கோ தூரத்தில் இருப்பதாக நினைப்பதால் மனம் லேசாகி சந்தோஷமாக இருக்கு” என்று சொல்கிறான். இப்படி உயரமான இடங்களில் வித்தியாசமான கோணங்களில் படம் எடுத்து எல்லோரையும் அசத்தப்போறானாம்.



ஆனா யாரு பெத்த பிள்ளையோ, இந்தப் படங்களை பார்த்தாலே எனக்கு இருதயம் நின்றது போல் இருக்கு. என்னை இந்த உயரத்தில் கொண்டு போய் விட்டால் கீழே பார்க்காமல், ஏங்கியே செத்துவிடுவேன்.
(ஒரு ரகசியம் சொல்றேன், யாருக்கும் சொல்லிடாதீங்க... முன்னாடி சொன்னேனே 3-4 மாடியிலேயே மயங்கிவிடுவார்கள் என்று. அது என்னைத் தான்)


1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

sugi said... Best Blogger Tips

ஐயோ பயந்தாங்கொள்ளி ஷர்மி அக்கா! நானெல்லாம் 6 அல்லது 7 மாடி வரைக்கும் தாக்குப் பிடிப்பேனே!

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget