Friday 23 September 2011

லண்டனில் ராதிகா சரத்குமார்


இந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் உள்ள Wembley Arenaவில் Raadaan Media Works நடாத்தும் நட்சத்திர கலை விழா நடைபெறவுள்ளது. இதில்  ராதிகா, சரத்குமார், சிம்பு, சினேகா, ஆர்யா, பரத், ராகவா போன்ற நட்சத்திரங்களும் ஹரிஹரன், ஆண்ட்ரியா, நரெஷ் ஐயர், விஜய் பிரகாஷ் மற்றும் பல பாடகர், பாடகிகள், நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். பல ஆயிரம் பவுண்ட்சுகள் செல்வழித்து தான் இந்த விழா நடக்கும், போட்ட முதலை எப்படியும் திருப்பி எடுத்து விட வேண்டும், அதை விட அதிக டிக்கட்டுகள் விற்பணையாகி இலாபம் ஈட்ட வேண்டும் என்று ராதிகா அம்மையார் நினைப்பதெல்லாம் சரிதான்.





 ஆனால் சமைப்பதெற்கென்று காய்கறி வாங்கப்போன கடைக்குள் பார்த்தால் ராதிகா சரத்குமார் தம்பதியினர் டிக்கட் விற்றுக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அவர்கள் இரண்டு பேரையும் பார்க்க ”ஐயோ பாவம், ஏன் இவர்களுக்கு இந்த நிலை” என்று தான் தோண்றியது. மளிகைக்கடை முடிந்த பின் 8 மணிக்கு ஒரு உணவகத்திற்கு சென்று அங்கும் விற்பனை தொடரும் என்றார்கள்.
இவர்கள் விற்றாலும் சரி வேறு யார் விற்றாலும் சரி விற்கக்கூடிய டிக்கட்டுகள் தானே விற்கும். நாடிருக்கும் நிலையில் குறைந்த பட்ச கட்டணமே £30 எனும் போது எத்தனை பேர் போவார்களோ தெரியவில்லை. பெரும் நட்சத்திர பட்டாளத்தின் கும்மாள பில்லைப் பார்த்து விட்டு ராதிகா மயக்கம் போடாவிட்டால் சரி.

7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

IlayaDhasan said... Best Blogger Tips

புரோமோஷன் , புரோமோஷன் ,புரோமோஷன்
ஆண்களே ,பெண்களே : நீங்கள் "அந்த" விசயத்தில் கில்லாடி ஆகணுமா?

ரிஷபன் said... Best Blogger Tips

சமைப்பதெற்கென்று காய்கறி வாங்கப்போன கடைக்குள் பார்த்தால் ராதிகா சரத்குமார் தம்பதியினர் டிக்கட் விற்றுக்கொண்டு இருந்தார்கள். எனக்கு அவர்கள் இரண்டு பேரையும் பார்க்க ”ஐயோ பாவம், ஏன் இவர்களுக்கு இந்த நிலை” என்று தான் தோண்றியது.

ஐயோ பாவம்!

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

ரிஷபன், நீங்கள் யாரைப் பார்த்து ஐயோ பாவம் சொல்கிறீர்கள் என்று குழப்பமாக உள்ளது. 

ரிஷபன் said... Best Blogger Tips

ஹா.. ஹா.. உங்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம்..
நான் சொன்னது மிஸ்டர் அண்ட் மிசஸ் சரத் பற்றிதான்..
வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என்று அடிக்கடி திரை உலகத்தினர் போவதும் அது தொடர்பாக சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதும் பார்த்திருக்கிறேன். அதன் பின்னணியில் அவர்கள் படும் பாடு உங்கள் பதிவில் பார்த்தேன். அதுதான் ஐயோ பாவம்!

வெர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்க பிளீஸ்..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வெர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்க என்று பலர் சொல்கிறார்கள். நான் பதிவுலகிற்கு புதிது. அப்படி என்றால் என்ன, அதை எப்படி செய்ய வேண்டும் என்று விளக்குவீர்களா ரிஷபன், ப்ளீஸ்...

ரிஷபன் said... Best Blogger Tips

Go to Settings then Comments..
Show word verification for comments - one option appears.. You select No..
Ok?

Unknown said... Best Blogger Tips

கலைவிழாக்கள் பலர் ஆதரவுடன் நன்றாக நடப்பதாகவே எண்ணிக்கொண்டு இருக்கிறோம். உங்கள் பதிவைப்பார்த்தபிறகு தான் விஷயமே புரிகிறது!

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget