Sunday 4 December 2011

அன்பும் பொறாமையும் புரிந்துணர்வும்



பகலோடு இரவையும், ஒளியோடு இருளையும் எப்படிப் பிரிக்க முடியாதோ அன்போடு பொறாமை என்பதையும் பிரிக்க முடியாது.

அன்போடு பொறாமை இருப்பது பிழையல்ல. ஆனால் அதோடு சேர்த்து புரிந்துணர்வும் இருக்க வேண்டும்.



ஊனையும் உயிரையும் கொடுத்து ஈன்றெடுத்த மகன் மேல் தாய் அன்பைப் பொழிகிறாள். ஆனால் வளர்ந்தபின் மணமுடித்து வரும் தனது மனைவி மீது அவன் ஆசையாக இருப்பதைப் பார்க்க பொறுக்காமல் தான் மாமியார் மருமகள் சண்டை. காதலித்து மணம் முடிக்கும் கணவர் தனது அக்கா, தங்கையுடன் பாசமாக இருப்பதைப் பார்த்துத் தான் நாத்தனார் பிரச்சிணை. இதில் பார்த்தால் பெண்களே எளிதில் உண்ர்ச்சி வசப்படுபவர்கள். அதனால் அன்பாக இருந்தாலும் சரி, ஆத்திரமாக இருந்தாலும் சரி முழு வீச்சில் வெளிக்காட்டுவது அவர்களே.. பொறாமைக் குணத்திலும் அப்படியே...!

புதிதாக ஓர் உறவு வந்து பாசத்தில் பங்கு போடும் போது மனதை நெருடத் தான் செய்யும். ஆனால் புரிந்துணர்வு இருந்து விட்டால் எந்தப் பிரச்சிணையும் இல்லை. என் கணவர் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். ஆனால் அதற்காக அவர் எனக்கு மட்டும் உரியவராக இருக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பதில்லை. என்னவர் எல்லாவற்றிலும் சிறந்தவராக இருக்க வேண்டும். உறவுகளுக்கிடையிலும் தான். ஒரு நல்ல மகனாக, நல்ல அண்ணனாக, நல்ல அத்தானாக, நல்ல பெரியப்பா, மாமாவாக.. இன்னும் என்னென்ன உறவு முறை உள்ளதோ அவை எல்லாவற்றிலுமே நல்லவராகவே இருக்க வேண்டும். உங்கள் கணவன், மனைவி பற்றியும் இப்படியே நினைத்துப் பாருங்கள். அதன் பின் பிரச்சிணையே இருக்காது. அவர் தங்கை, தம்பிமார் அண்ணனை விட்டுவிட்டு உங்களைத் தான் நாடி வருவார்கள். அவர் அம்மா, அப்பா கூட மருமகளை தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.


புரிந்துணர்வு வரும் போதே விட்டுக்கொடுப்பும் வந்து விடும். சண்டை போட்டு உம்மென்று இருக்கும் இருவருக்கு இடையிலும் யார் முதலில் பேசுவது என்ற பிரச்சிணை தான் இருக்கும். உண்மை அன்பு இருக்கும் இருவர் என்றால் அவரவர் முகத்தைப் பார்த்தும் சிரித்து விடுவார்கள். அதனுடன் சமரசமாகிவிடுவார்கள். முகத்தைப் பார்த்தால் மட்டும் போதவில்லையா மனம் திறந்து பேசுங்கள். எந்தப் பிரச்சினையும் முடிந்து விடும்.  


இந்த வழிமுறைகள் கணவன் மனைவிக்கு இடையில் என்று மாத்திரம் இல்லை. நாம் உறவாடும் எல்லா உறவுகளுக்குமே பொருந்தும்.

10 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Unknown said... Best Blogger Tips

"அவர் எனக்கு மட்டும் உரியவராக இருக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பதில்லை. என்னவர் எல்லாவற்றிலும் சிறந்தவராக இருக்க வேண்டும். உறவுகளுக்கிடையிலும் தான்"
இந்தப் பார்வை, இந்த எண்ணம் எல்லோரிடமும் இருந்தால் பிரச்சினைகளே தோன்றாதே!

Admin said... Best Blogger Tips

அன்போடு பொறாமை இருப்பது பிழையல்ல. ஆனால் அதோடு சேர்த்து புரிந்துணர்வும் இருக்க வேண்டும்.

ஆமாம்..புரிந்துணர முடியாமற்போனால் வாழ்க்கை பாழ்பட்டுப் போய்விடுகிறது..

'சூரியன் சுட்டெரிக்கிறான்'
வரவை எதிர்பார்க்கிறேன்..

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

நீங்க எப்படி மேடம்...? உங்க மாமியாரோட குடுமிப்பிடி சண்டை போட்டிருக்கீங்களா...

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@வியபதி
அதனால் தான் என்னால் முடிந்த வரை இந்தச் செய்தியைப் பரப்புகிறேன்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோ.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@மதுமதி
வருகைக்கு நன்றி நன்பரே...
நானும் வருகிறேன்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@மதுமதி
வருகைக்கு நன்றி நன்பரே...
நானும் வருகிறேன்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@மதுமதி
வருகைக்கு நன்றி நன்பரே...
நானும் வருகிறேன்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran
நான் தான் தெளிவாக சொல்லியிருக்கிறேனே. என்னைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்று. பின் ஏன் நான் அந்தத் தலையில் இருக்கும் குடுமியைப் பிடித்து சண்டை போட வேண்டும் சொல்லுங்கள்... Philo...

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

அருமை... அருமை... பகிர்விற்கு நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

ரிஷபன் said... Best Blogger Tips

உம்மென்று இருக்கும் இருவருக்கு இடையிலும் யார் முதலில் பேசுவது என்ற பிரச்சிணை தான் இருக்கும். உண்மை அன்பு இருக்கும் இருவர் என்றால் அவரவர் முகத்தைப் பார்த்தும் சிரித்து விடுவார்கள். அதனுடன் சமரசமாகிவிடுவார்கள். முகத்தைப் பார்த்தால் மட்டும் போதவில்லையா மனம் திறந்து பேசுங்கள். எந்தப் பிரச்சினையும் முடிந்து விடும்.

உண்மை அன்பு இருந்தால் எந்தப் பிரச்னையும் நீடிக்காது.. வந்த வேகத்தில் ஓடிப் போய் விடும். நன்றாகச் சொன்னீர்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget