Saturday 1 October 2011

மாயக்கண்ணாடி - 01/10/2011





அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.



::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உங்களுக்கு Tom & Jerry, Garfield போன்ற பூனைகளைப் பிடிக்குமா ? அப்படியென்றால் இந்த சைமனின் பூனையையும் பிடிக்கும். பல ஆண்டுகளாக You Tubeஐ கலக்கிவருகிறது. அதிகமாக பார்வையிடப்பட்ட வீடியோக்கள் லிஸ்ட்டில் எப்போதும் இருக்கும்.



:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பல்டின்னு கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் அந்தர் பல்டின்னு கேள்விப்பட்டிருக்கிறீர்களா... அது இது தான். Paul Melor என்ற அயர்லாந்து ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அல் கொய்தா இயக்கத்தின் பிரதான ஆள் சேர்ப்பு வேலை செய்யும் அன்செம் சௌத்ரி என்பவனின் சீடனாக மாறி தன்னை மதம் மாற்றிக் கொண்டு பெயரையும் அபு ஜிப்ரீல் என மாற்றி இருக்கிறார். Muslims Against Crusades (MAC) organisationன் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். ராணியின் வீரணான நான் இப்போது அல்லாவின் வீரன் என்று மார் தட்டுகிறார். ஒசமா பின்லேடன் இறந்தாலும் அவரைப் போன்ற பல பேர் உருவாகுவார்கள் என்கிறார் இவர். எல்லாத்திற்கும் மேலாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் அல்லாவின்      ஆட்சியைக் கொண்டு வருவது தான் தன் இலட்சியம் என்கிறார். இவ்வளவு பேசுபவரின் பின் கழுத்தில் இங்கிலாந்துக் கொடி பச்சை குத்தப் பட்டிருப்பது அவர் தலையில் கட்டியிருக்கும் துணி விலகும் போது தெரியத்தான் செய்கிறது.  



::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இங்கிலாந்தின் உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் இந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூளை சேதமடைந்து எந்த வித இயக்கமும் இல்லாமல் இருக்கும் ஒரு பெயர் வெளியிடப்படாத பெண்ணின் குடும்பம் அவரைக் காருண்ய கொலை செய்வதற்காக விண்ணப்பித்திருந்தது. அதற்கு “அந்தப் பெண், நோய்வாய்ப்பட்ட உடனேயே தனக்கு இப்படி ஒரு நிலை வந்தால் தன்னைக் கொன்று விடும் படி கேட்டிருந்தார்” என்று காரணமும் சொல்லியிருந்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இதை நிராகரித்து விட்டது. இங்கிலாந்தில் இருக்கும் பல நோயாளிகளின் குடும்பங்கள் மற்றும் நீதித் துறை ஆய்வாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வழக்கு. வழக்கம் போல் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சணங்கள் வந்த வண்ணம் உள்ளது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...



::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

10 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

மாய உலகம் said... Best Blogger Tips

அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.//

தொடர்ந்து மாய கண்ணாடியை பார்ப்பேன்.. நிறைய விசயங்களை தெரிந்து கொள்கிறேன்...

மாய உலகம் said... Best Blogger Tips

சைமன் பூனை காணொளியும் சூப்பர்...

ரிஷபன் said... Best Blogger Tips

மாயக்கண்ணாடிக்குள் தெரிகிற உலகம் சுவாரசியமானது..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நன்றி ராஜேஷ்... நன்றி ரிஷபன். உங்கள் இருவரின் தொடர் பின்னூட்டங்களிற்கு நன்றி.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

ரிஷபன், ராஜேஷ் - எனக்கு ஒரு குழப்பம்... பதில் சொல்லுங்கள் தம்பிகளே... மாயக்கண்ணாடி வாரம் இரு முறை வெளியிடுகிறேன். அது போர் அடித்து விடுமோ? வாரம் ஒரு முறையாக மாற்றினால் நல்லதோ? உங்கள் கருத்தென்ன?

ரிஷபன் said... Best Blogger Tips

எனக்கும் இதே போல சில குழப்பங்கள் உண்டு. தொடர்ந்து சிறுகதை (அ) கவிதை போட்டால் போர் அடிக்குமா என்று. இதனாலேயே இடைவெளி கூட விட்டு பதிவுகள் போடுகிறேன்.
பொதுவாய் ஒரே பாணி பதிவுகள் வாசிப்பவர்களுக்கு போர் அடிக்கக்கூடும்.
நமக்கே கூட. நமது வெவ்வேறு திறமைகளை மெருகேற்றவும் அது ஒரு தடைதான்.. புதுசு புதுசாய் யோசிக்க நமது வலைத்தளம் ஒரு மேடையாய் இருக்கட்டுமே..

மாய உலகம் said... Best Blogger Tips

அப்படியெல்லாம் இல்லை சகோதரி.. நீங்கள் வாரத்திற்கு 3 முறையாக போட்டாலும் சந்தோசம் தான் உள்ளே இருக்கும் விசயம் கவர்ந்தால் போதுமே... என்ன மாயக்கண்ணாடி என்கிற தலைப்புடன் கூட அன்றைய பதிவுக்கான தலைப்பாக தேதிக்கு பதில்.. கேப்சனும் கூட இருந்தால் பெட்டராக் இருக்கும்... ஏனேன்றால் நீங்கள் ஏற்கனவே போட்ட மாயக்கண்ணாடியை கேப்சன் டேட் வைசாக இருந்தால் படித்துருப்பமா.. இல்லையா என்ற குழப்பம் வரும்.. பதிவுக்கான கேப்சனாக இருந்தால் ஓ இது படிக்கவில்லையே ஓய்வு நேரத்தில் அந்த பதிவையும் படிக்கலாம் என்ற எண்ணம் வரும் என்பது எனது தாழ்மையான கருத்து.. பிழையிருந்தால் மன்னிக்கவும்.

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் அக்காச்சி,

வித்தியாசமான இரு தகவல்கள் மூலம் மாயக் கண்ணாடிப் பதிவினை அலங்கரித்திருக்கிறீங்க.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

தம்பிகளே... உங்ககிட்ட கேட்டால் தெளிவு பிறக்கும் என்று பார்த்தால் இரண்டு பேரும் வெவ்வேறு கருத்துகள் சொல்லி, இப்புடி குழப்பிட்டீங்களே... (சிவாஜி எஃபெக்ட்டுடன் வாசிக்கவும்)

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நீரூபன், ஆசையாய் அக்காச்சி என்ற வார்த்தையைக் கேட்கவே உச்சி குளிர்ந்திட்டு. அன்புக்கும், மதப்பிற்கும் நன்றி. வீட்டில் நான் தான் மூத்தவள். இப்போது வலைத்தளத்திலும் நல்ல தம்பிகள் மூவர் கிடைத்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget